பரத்தையருள் ராணி
லீனா மணிமேகலையின் கவிதைகளில் பலவாறாக விளிக்கப்படும் பாலியல் உறுப்புகள் ஆண்மையப் புனைவு நீக்கம் செய்யப்பட்டவையே. அவைகள் எந்திரமயமாகிவிட்ட ஒரு நிலையில், அவற்றை அவர் உயிர்நலனாக பாவித்து மறு உற்பத்தி மீதான மயக்கப் புனைவுகளை நீக்கி தனவயப் புனைவுகளில் தன்பால் ஒருமையாக்குகிறார்.. ஆணை உள்ளடக்கியோ, வெளியேற்றியோ, மீண்டும் மீண்டும் தனிமை கொள்ளும் பெண்ணுடல் தன் ஒருமையில் சுய பால்மை கொள்கிறது. இதற்கு ஆண் தேவைப் படலாம், தேவைப் படாமலும் போகலாம், சமூக நாடக நிகழ்வில பெண் கதா பாத்திரங்கள் இடப்படுத்தப்டும் போது பிரதி – பிரதியாளர் என்ற இடைவெளிக்குள் பிரதியை விட்டுவிட்டு பிரதியாளர் பற்றிய பிரதிகளை பெருக்கிக் கொண்டே போவது வாசக எதிர்வினை அல்ல. லீனா மணிமேகலையின் கவிதை, லீனா மணிமேகலை இரண்டையும் பிரதிகளாக்கி வாசிக்கும்போது படைப்பாளி படைப்பில் தன்னை மறைத்துக் கொள்ளாத அப்பட்டமான ஃபூக்கோவியத் தன்மையுடன் இருப்பதால், கவிஞர் விமர்சனத்துக்குள்ளாகிறார். அது நீண்டகால ஆண் மன அமைப்பின் வெளிப்பாடு. அவருடைய பரத்தையருள் ராணி இதுவரை எழுதி வரும் நவீனப் பெண் கவிஞர்களின் உறுதிக்கும் இனிமேல் எழுதப்போகும் இளம் பெண் கவிஞர்களின் துணிவுக்கும் உள்ளடக்கம் – வடிவம் இரண்டிலும் மீறிய கவிதையாகவே வாய்ப்புக் கொண்டிருக்கிறது.
– கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
(ஜூன் 2012)
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 200
ஒற்றையிலையென
லீனா மணிமேகலை கவிதைகள் மீது கவனம் செலுத்தும் முன்பு, ஒரு தன்னிலை மறுவிசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். பத்தாண்டுகளுக்கு முன் எழுதி வெளியான கட்டுரையொன்றில் (பெண் கவிதை மொழி – கணையாழி, ஏப்ரல் 1994) புதிய தமிழ்க்கவிதையில் பெண்ணின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தவையாகவோ தீவிரமானதாகவோ இல்லை என்ற தொனியில் எழுதியிருந்தேன். பெண் அனுபவங்களில் அர்த்தம் கொண்டதும் அவளது உணர்வுகளில் ஒளி பெற்றதுமான ஒரு கவிதைமொழி உருவாகவில்லை என்ற புகாரையும், உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கட்டுரை வெளிப்படுத்தியிருந்தது. அந்தக் கருத்தை முன்னிறுத்திய தருணத்தில் “பெண்ணெழுத்து” என்ற கருத்துருவம் தமிழில் வலுப்பெற்றிருக்கவில்லை. வெளியாகியிருந்த ஓரிரு பெண் கவிஞர்களின் தொகுப்புகளும் ஒற்றையான உதாரணங்களாக இருந்தனவே தவிர பொதுக் கருத்தாடலுக்கான விரிவு கொண்டிருக்கவில்லை. இந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளதை இன்று மகிழ்ச்சியோடு உணர முடிகிறது. தமிழ்க் கவிதையில் இப்போது கேட்கும் அசலானதும் தீவிரமானதுமான குரல்களில் பொருட்படுத்தக்கூடிய ஒன்றாக லீனா மணிமேகலையின் கவிக்குரலைக் காண்கிறேன்.
– கவிஞர் சுகுமாரன்
( நவம்பர் 2003)
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை: 60