அந்தரக்கன்னி
அந்தரக்கன்னி மற்ற கவிகளின் கவிதைகளிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வது போலவே லீனா மணிமேகலையின் மற்ற தொகுப்புகளிலிருந்தே கூடத் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. இதற்கு முன்வந்த பரத்தையருள் ராணி தொகுப்பு ஆண் தன்னிலையின் வன்முறைகளுக்கெதிரான உக்கிரமான குரலாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுவொரு போராளி களத்தில் நின்று உரக்கச் சத்தமிட்டுக் கொண்டு வாள் சுழற்றுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் தொகுப்பு. ஆனால் அந்தரக் கன்னி உக்கிரம் கூடிய அதே போராளி வீட்டுக்கு வந்து தன் காதல் இணையோடு கலந்திருக்கும் தருணத்தைப் பதிவு செய்கிறது. இதில் குறிப்பிட வேண்டியது காதல் இணையில் எதுவும் களிறில்லை; இரண்டும் பிணைகள்தான். அந்தரக்கன்னி கவிதைகள் யதார்த்தம் என்னும் கலாச்சார ஒழுங்கு அடிப்படையிலான புனைவுகள் பெண் தன்னிலைக்கெதிராக நிகழ்த்தும் தாக்குதல்கள், வரலாற்றுப் புனைவுகளின் மூலம் பெண் தன்னிலை ஆட்கொள்ளப்படுதல் ஆகியவற்றிலிருந்து தனது கலகத்திற்கான தர்க்கக் காரணிகளைக் கைக்கொள்கின்றன. கலாச்சார ஒழுங்குகளும் வரலாற்று ஒழுங்குகளும் மற்றமைகளைக் கழுவேற்றியபின் கழுவில் வழிந்த குருதிக் குழம்பென உறைந்திருக்கின்றன இக்கவிதைகள்.அந்தரக் கன்னியின் கவிதைகள் ஏழு திணைகளுக்கு வெளியே தனது இருப்பை உறுதி செய்யும் கவிதைகள்; அவை எட்டாவது அகத்திணைக் கவிதைகள். அவற்றின் திணையை இனியும் பூக்களின் பெயரால் அழைப்பது சரியல்ல. வேண்டுமானால் யோனியின் பெயரால் அழைக்கலாம்; அதுவும்கூட அந்தத் திணை மாந்தரின் ஒப்புதல் இருந்தால்தான்.
– கவிஞர் மனோ மோகன்
(மே 2013)
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 100

செங்கடல்
செங்கடல் ஒரு மக்கள் பங்கேற்பு சினிமா. எப்போதும் வாழ்வும் மரணமும் கண்கட்டி விளையாடும் இந்திய இலங்கை எல்லைக்கிராமமான தனுஷ்கோடியின் மீனவர்களையும் ராமேஸ்வரத்தின் மண்டபம் அகதிகளையும் நடிகர்களாக கொண்டே படமாக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியை, இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போரால் சிதறடிக்கப்படட அதன் எளிய மக்களில் வாழ்வுக் கூறுகளை, மிக நுணுக்கமாக கையாளுகிறது இத்திரைப்படம். முப்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று இலங்கைத் தமிழர் மற்றும் இந்தியத் தமிழ் மீனவர் பிரச்சினையைப் பற்றிய பரந்துப்படட விவாதத்தையும் கவனத்தையும் உருவாக்கியது.
மத்திய தணிக்கைக் குழு, செங்கடலை அதன் அரசியல் விமர்சனங்களுக்காக பொது இடங்களில் திரையிட தடை விதித்திருந்தது. பல மாதகால சட்டப் போராடடத்திற்குப் பின் எந்த வெட்டும் இல்லாமல் மேல்முறையீட்டு ஆணையத்தின் தலையீட்டால் “A” சான்றிதழை ஜூலை 2011-ல் பெற்றது. சென்சார் தடையிலிருந்து மீண்ட செங்கடலின் வெற்றி, கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ளவர்கள் பெற்ற வெற்றி.லீனா மணிமேகலை, ஷோபா சக்தி, சி.ஜெரால்டு கூட்டுழைப்பில் உருவான திரைக்கதையின் பிரதி.
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 300 (DVD இணைப்புடன்)
உலகின் அழகிய முதல் பெண்
இயல்புகளின் இயல்புகளுக்குள் பொதிந்த ஆதிப் பெண்ணின் குரல், லீனாவின் கவிதைகளில் பெரும் உக்கிரத்துடனும் கொண்டாட்டத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எல்லாவிதமான சுதந்திரங்களையும் சுவீகரித்துக் கொள்கிற கவி மனத்தின் கடடற்ற போக்கில், கவிதையின் வழியாக பெரும் கலாசாரத்தின், பாலியல் முகத்தின் கரும்புள்ளிகளை வெடிவைத்து தகர்த்துவிடுகிறார். பலரது கண்டனங்களையும், முகச்சுழிப்புகளையும் கிளப்பிய இவரது தூமத்திக் கவிதைகளை பெரும் கலாசாரத்திற்கு எதிரான ஒரு சொல்லியல் நிகழ்த்துப் போராட்டமாக கருதிவிட்டு இவரது கொந்தளிப்பு மிக்க கவிதைகளுக்குள் நுழைந்துவிடலாம்.
– கவிஞர் சமயவேல்
(அக்டோபர் 2010)
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 70
பரத்தையருள் ராணி
லீனா மணிமேகலையின் கவிதைகளில் பலவாறாக விளிக்கப்படும் பாலியல் உறுப்புகள் ஆண்மையப் புனைவு நீக்கம் செய்யப்பட்டவையே. அவைகள் எந்திரமயமாகிவிட்ட ஒரு நிலையில், அவற்றை அவர் உயிர்நலனாக பாவித்து மறு உற்பத்தி மீதான மயக்கப் புனைவுகளை நீக்கி தனவயப் புனைவுகளில் தன்பால் ஒருமையாக்குகிறார்.. ஆணை உள்ளடக்கியோ, வெளியேற்றியோ, மீண்டும் மீண்டும் தனிமை கொள்ளும் பெண்ணுடல் தன் ஒருமையில் சுய பால்மை கொள்கிறது. இதற்கு ஆண் தேவைப் படலாம், தேவைப் படாமலும் போகலாம், சமூக நாடக நிகழ்வில பெண் கதா பாத்திரங்கள் இடப்படுத்தப்டும் போது பிரதி – பிரதியாளர் என்ற இடைவெளிக்குள் பிரதியை விட்டுவிட்டு பிரதியாளர் பற்றிய பிரதிகளை பெருக்கிக் கொண்டே போவது வாசக எதிர்வினை அல்ல. லீனா மணிமேகலையின் கவிதை, லீனா மணிமேகலை இரண்டையும் பிரதிகளாக்கி வாசிக்கும்போது படைப்பாளி படைப்பில் தன்னை மறைத்துக் கொள்ளாத அப்பட்டமான ஃபூக்கோவியத் தன்மையுடன் இருப்பதால், கவிஞர் விமர்சனத்துக்குள்ளாகிறார். அது நீண்டகால ஆண் மன அமைப்பின் வெளிப்பாடு. அவருடைய ‘பரத்தையருள் ராணி’ இதுவரை எழுதி வரும் நவீனப் பெண் கவிஞர்களின் உறுதிக்கும் இனிமேல் எழுதப்போகும் இளம் பெண் கவிஞர்களின் துணிவுக்கும் உள்ளடக்கம் – வடிவம் இரண்டிலும் மீறிய கவிதையாகவே வாய்ப்புக் கொண்டிருக்கிறது.
– கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
(ஜூன் 2012)
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 200