Of dead seas and Indian independent films – Bollywood
Mumbai: “Whether we see our wives or not, we see a dead body every day,” complains a policeman inspecting the body of a fisherman who has been shot at sea by the Sri Lankan Navy. That one line in Leena Manimekalai’s film ‘Sengadal’ (‘The Dead Sea’), the only Indian film in the international competition in the just-concluded Mumbai Film Festival, seems to sum up not just this movie, but Indian films in general.
Whether you see good cinema in India or not, you invariably get to see tactless blockbusters every Friday, could be a common complaint of any cinema fan in India.
And nowhere is this metaphoric example more evident than in Manimekalai’s film, which from many perspectives, like technical aspects and even scripting may not be one that is up there, but there is no denying that this is an important film that needed to be made.
“Sixty percent of the film was illegally shot. We had to resort to guerilla style of filmmaking to finish it,” Manimekalai’s told IANS.
‘The Dead Sea’ is a tale of Sri Lankan Tamils fleeing to India, only to face persecution here.
Secondly, the fishermen community of Rameshwaram who venture out to sea, are blatantly shot, beaten and in a few cases, have even sexually assaulted by the Sri Lankan Navy for no apparent reason. They also do not get much support from the Indian authorities. With over 600 dead or missing fishermen, it is an extreme example of living in the fringes.
Manimekalai wanted to show an honest story. Hence you have real people almost playing themselves and their lives to the T. The result is a film that may be far from cinematic accomplishment, but the one accusation that cannot be levied on it is of being dishonest.
If you were to see footages of film stars, you’d obviously want them in HD. Yet on the same TV, you don’t mind the grainy images of a terrible atrocity that makes breaking news. In that light, ‘The Dead Sea’, that gives voice to the most marginalised of the marginalized lot, becomes an extremely important film.
In an ideal world, it would have enjoyed better resources. But neither has the film been made in an ideal world, nor is Indian cinema in a similar state with most film made and released only solely commercial intentions.
Yet, this year’s Mumbai Film Festival provided an interesting contrast and an example of where Indian cinema is headed. Around 15 percent of films in the festival were Indian. They were put in three sections ‘Indian Frame’, ‘New Faces In Indian Cinema’ and ‘Film India Worldwide’.
The range of films in these sections reflected the variety of films which sadly, like the fishermen in the film, lie on the fringes of Bollywood.
Despite receiving rave reviews from festival viewers, the fate of most of these films are doubtful, just like the fishermen in ‘The Dead Sea’.
“The fishermen of this community on which this film is based, are facing extinction,” says Manimekalai. One hope this is not the case with these independent films.
(For updates you can share with your friends, follow IBNLive on Facebook, Twitter and Google+)
இனத்துரோகி என்னும் பட்டத்தை ஏற்கத் தயார் – லீனா மணிமேகலை நேர்காணல்
மாற்று சினிமா என்பது நெருப்பு ஆறு. இங்கே யாருக்கும் அதன் அருகில் போகத் துணிச்சல் இல்லை. லீனா அந்த நெருப்பாற்றை நீந்திக் கடந்து கொடியை நாட்டியவர்.
சர்வதேச அளவில் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தும் சில இயக்குனர்களில் ஒருவர்.
ராமேஸ்வரம் கடல் பரப்பில் இன்று விழும் ஒவ்வொரு பிணத்தையும் மருத்துவ அறிவைக் கொண்டல்ல; சர்வதேச அரசியல் அறிவைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை தன்னுடைய செங்கடல் படம் மூலம் உருவாக்கிக் கொண்டிருப்பவர்.
சமீபத்தில் “இளங் கலைஞர்களுக்கான சார்ல்ஸ் வாலஸ் விருது” பெற்று லண்டன் பல்கலைக் கழகத்தில் Visiting Scholar ஆக UK விற்குப் பறந்து சென்றவரை தரையிறங்கும் முன் ஒரு நேர்காணலுக்காகப் பிடித்தோம்.
எப்போதும் உரையாடலுக்குத் தயாராக இருப்பது லீனாவின் பெருமைகளில் ஒன்று.
இனி நேர்காணல்
செங்கடல் என்னும் இந்தக் கதை களத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? உலகத்திற்கு என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தீர்கள்?
செங்கடல், சாட்சியாகவும், கதைசொல்லியாகவும் நான் நிற்கும் இடம். தனுஷ்கோடி என்பது ஒரு அசுரத்தனமான மணல் காடு. அங்கு ஓயாமல் சுழன்றடிக்கும் காற்றில் தங்கிவிட்ட ஓலமும், முகத்திலப்பும் மணல் துகள்களின் கதைகளும் தான் என்னை செங்கடலுக்கு இழுத்து சென்றது.
மார்ச் 2009லிருந்து தனுஷ்கோடி நோக்கிய என் பயணமும் தேடலும் இன்றும், என்றும் முடியுமா தெரியவில்லை. புயல் அழித்த நகரத்தின் சிதிலங்களை வீடாக கொண்ட தனுஷ்கோடி கம்பிப் பாடு கிராம மீனவர்களின் குசினிகளில் உண்ட மீனும் நண்டும் இன்னும் என் கைகளில் வாசனையாய் மணக்கிறது. சராசரி ஒவ்வொரு மூன்று மீனவக் குடும்பங்களிலும் ஒரு விதவையையாவது, அல்லது மகனை இழந்த தாயையாவது பார்க்க நேர்ந்தது தான் செங்கடலை எழுத தூண்டியது. தமிழ் என்ற மொழியை பேசுவதாலும், கறுப்பாய் இருப்பதாலும் மட்டுமே அடித்து நொறுக்கப்பட்ட, கொல்லப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, சிறையிலடைக்கப்பட்ட இந்திய மீனவர்களின் கதைகளை நான் கேட்டு வெறும் மௌன சாட்சியாகி போகாமல், பல ஆயிரம் செவிகளுக்கும், கண்களுக்கும், மனசாட்சிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையே செங்கடலை திரைப்படமாக்க தூண்டியது.
நீங்கள் எதைச் செய்தாலும் தமிழரங்கில் அது சர்ச்சையை உண்டாக்கும். ஷோபா சக்தி என்ன செய்தாலும் சர்வதேச தமிழ் அரங்கில் அது சர்ச்சையை உண்டாக்கும். இருவரும் சேரும்போது சர்ச்சை அதிகமாகுமே? எந்த எண்ணத்தில் சேர்ந்து செயல்படலாம் என்று முடிவு செய்தீர்கள்?
சர்ச்சைகளால் நட்பு உருவாகுமா என்ன? தமிழ் சூழலில் ஒரு நோய்த்தன்மை உண்டு. மொத்தத்துவப்படுத்துவது, அல்லது தனிமைப்படுத்துவது. செயற்பாட்டாளர்களை ஏதாவது முத்திரை குத்தி அவரவர்களுக்கான வசதியான பைகளில் போட்டு வைத்துக் கொள்வதென்பது அவதூறோ, தனிநபர் தாக்குதல்களோ, ஒழுக்கவாத குற்றச்சாட்டுகளோ செய்வதற்கு வசதியாகவும், ஏதுவாகவும் இருக்கிறது. மற்றபடி எனக்கும் ஷோபாவுக்கும் இருக்கும் ஒற்றுமை அரசியல் பிராணிகளாக இருப்பது தான் என்று நினைக்கிறேன். எங்களிடையே அன்பும், அக்கறையும் தோழமையும், நிரம்ப மரியாதையும், கூடவே வேறுபாடுகளும் முரண்களும் நிச்சயம் உண்டு. இணைவும், பிரிவும் கண்ணாடியும் கல்லும் போன்றது தான் என்பதையும் தெரிந்தே வைத்திருக்கிறோம்.
செங்கடலில் இணைந்து பணியாற்றினோம், சாத்தியமற்ற சிலவற்றை செய்து பார்ப்பதற்கு அந்த இணைவின் ஆற்றல் கை கொடுத்தது. இது தொடருமென்றே நம்புகிறேன். மூன்று வருட நட்பு, பணியும் பயணங்களுமாய் நீடித்தாலும் அவரிடம் கற்க வேண்டியது இன்னும் ஏராளம் இருக்கிறது.
திரைக் கதையில் ஷோபாசக்தியுடன் இணைந்து பணியாற்றியது எவ்வகையில் சரியாக இருந்தது?
ஒரு வருடமாக இந்த மக்களோடு அலைந்து திரிந்து, தரவுகளை சேகரித்து, மணிக்கணக்காய் நேர்காணல்கள் செய்து, சமைத்து, உண்டு, குடித்து, உறங்கி, வாழ்ந்து தான் கதையை எழுதி முடித்தேன். படத்தின் ஒவ்வொரு பிரேமும் அம்மக்களின் வாழ்வும் நினைவும் தான். திரைக்கதையாக உருவாக்க நினைத்த் போது ஜெரால்டிடம் உதவி கேட்டேன். சினிமாவைப் பொறுத்தவரை எனக்கு ஆசிரியத் தோழன் ஜெரால்டு. அவர் ஒரு டிராப்ட் எழுதினார். நான் அதை திரும்ப மறுபிரதியாக்கம் செய்தேன். திரைப்படத்தின் பிண்ணனி ஈழ அரசியல் என்பதுவும், அகதிகள் கதாபாத்திரங்கள் உருவாக்கம் மற்றும் ஈழத்தமிழ் வசனங்கள் இவற்றில் ஒரு ஈழ எழுத்தாளரின் பங்கு இருக்கவேண்டும் என்ற எண்ணமும் தான் எங்களை சோபசக்தியிடம் சென்று சேர்த்தது. தற்கால தமிழ் இலக்கியத்தின் ஆகச் சிறந்த கதைசொல்லி ஷோபாசக்தி என்பது என் அபிப்ராயம். இப்படி ஜெரால்ட், ஷோபா, மற்றும் நான் என மூவரும் இணைந்து பிரதியை மாறி மாறி எழுதிப் பார்த்து உருவாக்கப்பட்டது தான் செங்கடல் திரைக்கதை.
திரைப்படத்தில் சூரி என்ற அகதி கதாபாத்திரம், ஷோபா சக்தியில்லை என்றால் சாத்தியப்பட்டிருக்காது. ஒரு சமூகத்தில் உக்கிரமான போர்ச்சூழல் ஏற்படுத்தியிருக்கும் மனப்பிறழ்வின் குறியீடு சூரி. தனுஷ்கோடி மீனவர்களையும், மண்டபம் அகதிகளையும் அவரவர் வாழ்வில் ஏற்றிருக்கும் கதாபாத்திரங்களையே, திரையிலும் ஏற்க வைத்ததனால் பல பயிற்சி பட்டறைகள் நடத்த வேண்டியிருந்தது. மக்கள் வாழ்வு திரைக்கதையாவதும், திரைக்குழு – மீனவர்களும், அகதிகளுமாவதும் என்று கூடு விட்டு கூடு பாய்ந்து தான் செங்கடல் என்ற ரசவாதம் நடந்தேறியது.
நடிகர்கள் தேர்வு செய்திருக்கிற விதமும் அவர்களிடம் மிகச் சிறந்த நடிப்பை பெற்றிருப்பதும் இந்தப் படத்தின் முக்கிய பலமாக இருக்கிறது. நடிகர்கள் தேர்வு குறித்து என்ன முடிவு செய்திருந்தீர்கள்? என்னென்ன முயற்சிகளுக்குப் பின் இது சாத்தியமானது?
ஒரு சில கதாபாத்திரங்கள் தவிர இதில் நடித்த எல்லோரும் தனுஷ்கோடி, ராமேஸ்வர மக்களும், மண்டபம் அகதிகளும் தான். ஒவ்வொரு முறையும் அகதிகளை மண்டபத்திலிருந்து, நேவி போலிஸ் கெடுபிடிகள் தாண்டி தனுஷ்கோடி அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்துவதென்பது ஒரு மிஷன் இம்பாசிபில் போல தான் நடந்தேறும். படத்தில் போலீஸ் கதாபாத்திரங்கள் ஏற்ற பாதி பேர் ராமநாதபுர மாவட்டத்தில் போலீஸ் ஆகும் கனவோடு தினமும் கர்லாக் கட்டை தூக்கி பயிற்சி செய்துக் கொண்டிருந்த இளைஞர்கள், மற்றும் கிடாத்திருக்கை கிராமத்து தெருக்கூத்துக் கலைஞர்கள். மற்றும் திரைப்படக்குழுவின் சமையல்காரர், வாகன ஓட்டுனர்கள் என இறுதி உறுப்பினர்கள் வரை எல்லோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். கடுமையான சவால்கள் நிறைந்த தேர்விது. இன்னொரு படத்தை இப்படியான முறையில் என்னால் செய்ய முடியுமா என்று தெரியாது. ஒரு நூறு அகதிகளை சந்தித்து பேசி, புகைப்படமெடுத்து, வீடியோ எடுத்து, அவர்களுக்கு அதை காட்டி திருத்தங்கள் செய்து, ஸ்க்ரிப்டை சொல்லி, பட்டறைகளை நடத்தி, ஒரு ஐந்து பேரை தேர்வு செய்திருப்போம், ஆனால் படப்பிடிப்பின் போது அந்த ஐந்து பேரில் மூன்று பேர் தான் வந்து சேர்வார்கள். மற்ற இருவரை பிறகு கண்டே பிடிக்க முடியாது. களவாய் ஆஸ்திரேலியா போய் விட்டார் ஒருவர் என்பார்கள். இன்னொருவர் வேறு வேலை கிடைக்காததால் சும்மா வந்தார், மற்றபடி அவருக்கு வேறு வேலை கிடைத்துவிட்டதென்பார்கள். படப்பிடிப்பு நடக்கும்போதே என் பொண்டாட்டியை எப்படி வேறொருவனின் மனைவியாக நடிக்க வைக்கலாம் என சண்டை நடந்திருக்கிறது. குழந்தையாக நடித்த சிறுமி வயதுக்கு வந்துவிட்டதால், இனி வர மாட்டாள் என்று புதிய பிரசினை வரும். தலைவலிக்கிறது என்றொரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் மீனவர் நடுவே தலைமுடியை வெட்டிக் கொண்டு வந்துவிடுவார். அவருக்கு முடி வளரும்வரை காட்சி காத்திருக்கும். மனைவிக்குப் பிடிக்கவில்லை என்று சட்டைகளை மாற்றிப் போட்டுக் கொண்டு வருவார்கள் மீனவர்கள். காட்சியை கைவிட வேண்டியிருக்கும். வசனங்களை ஒரே போல வேறு கோணங்களுக்காக மக்களை பேச வைக்க முடியாது. ஷாட் டிவிஷனை நினைத்த மாதிரி எப்போதும் எடுக்க முடிந்ததில்லை. மிஸ் ஆன் சீன் என்று சொல்லப்படும் காட்சியாக்கம் மக்கள் போக்கில் தான் எடுக்க வேண்டியிருக்கும். கன்டினியுட்டி பஞ்சாயத்துகளால் உதவி இயக்குனர்கள் வேலையை விட்டே ஓடியிருக்கிறார்கள்.
மக்கள் பங்கேற்பு சினிமா என்பது ஒரு எளிய விஷயமில்லை. கேமிரா கோணத்திலிருந்து, பேசும் வசனத்திலிருந்து, உச்சரிப்பு, பாவனை, கலை, என்று படமாக்கலின் ஒவ்வொரு நுணுக்கமும் திரைக்குழுவும், மக்களும் எடுக்கும் கூட்டு முடிவாகத் தான் இருக்க முடியும். இது ஆசிரியப் பிரதியல்ல. இதை கேமிராமேனும், லைவ் சவுண்ட் பதிவுக் கலைஞரும், இயக்குனரும், இணைந்த ஆசிரியக் குழு மனமொட்டி முடிவெடுத்து மக்கள் போக்கில் தொழில்நுட்பத்தை, கலையை பிரதியாக்கம் செய்தால் மட்டுமே செங்கடல் போன்ற ஆக்கங்களை சாத்தியப்படுத்த முடியும்.
இந்தப் பட வேலைகளை துவங்கிய நாளிலிருந்து நிறைய இக்கட்டுகளைச் சந்தித்து வந்தீர்கள்? ஏன் இவைகளெல்லாம் நடக்கிறது? இவைகளைப் பற்றி இப்பொழுது என்ன நினைக்கிறீர்கள்?
நான் செய்வது எதுவும் சந்தைக்கான பொருளல்ல. நான் “பிலிம் இண்டஸ்ட்ரியை” சேர்ந்தவளுமல்ல. மந்தைக்கு தப்பின ஆட்டுக்கு மேய்ப்பனும் இல்லை, வேலியும் இல்லை. பலி கொடுக்கப்படாமல் ஒரு ஆடு தப்புவதை சமூகம் பார்த்துக் கொண்டிருக்குமா என்ன?
திரைக்கதை இல்லாமல் படப்பிடிப்பு நடத்தி, ஆனால் நேர்த்தியான திரைக்கதையைக் கொண்டு உருவாக்கிய படத்தைப் போன்ற தோற்றத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள்? இது எப்படி சாத்தியமானது? இந்த வடிவ நேர்த்தி எப்படி சாத்தியமானது?
இந்த படத்தை சுற்றி அது ஆவணப்படமா? கதைப்படமா? படமே இல்லையா? என்றெல்லாம் விவாதங்கள், ஏற்புகள், நிராகரிப்புகள் எல்லாம் நடக்கின்றன. வடிவம் என்பது ஒரு கலைஞனின் கையிலிருக்கும் ஒரு கோல் தான். அதுவே நிர்ப்பந்தமாக முடியாது. சொல்ல நினைத்ததை நேர்மையாகவும் விட்டுகொடுத்தலில்லாமலும் சொல்வதற்கு் எந்த வடிவம் கை கொடுக்கிறதோ அதைக் கையாள்வது தான் சரியாக இருக்க முடியும். டாக்குமெண்டிங் பிக்சன் என்பார்கள். செங்கடலுக்கு அந்த உத்தியே சரியென நம்பினேன். செய்தேன். ஒரு ஆத்தராக இந்த படைப்பில் யாரையும் நான் பிரதிநிதிப்படுத்தவில்லை. எடுத்துக் கொண்ட வாழ்வோடு உணர்வு பரிமாற்றம் செய்ய தலைப்பட்டேன் என சொல்லலாம்.
நீங்கள் நிறைய ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறீர்கள்? இந்தப் படம் இயக்கும் போது புதிதாக என்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது?
இதுவரை நான் செய்த ஆவணப்படங்களும் பல சிக்கலகளுக்கு நடுவில் தான் உருப்பெற்றன. ஆனால் அவை மிக குறைந்த செலவில் செய்யப்பட்டவை. ரேடியோ ஜாக்கி, தொலைக்காட்சி துறை வேலைகள் செய்வது, தனியார் திரைப்படக் கல்லூரிகளில் பாடம் எடுப்பது போன்ற வேலைகளைப் பார்த்து வரும் ஊதியத்தில் சேமித்தே அதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். திரைப்பட விழாக்களுக்கு செல்வது எப்போதும் அந்தந்த விழாக்குழுவின் பொறுப்பென்பதால் பெரிய சுமை இருக்காது. ஆனால் செங்கடல் முழுநீள கதைப்படம். முதலீடு அதிகம். போட்டியும் அதிகம். முழுநீள திரைப்பட சர்க்கியூட்டில் தாக்குப் பிடிக்க குறைந்தபட்ச பின்புலமாவது அவசியப்படுகிறது. மொத்த பட்ஜெட்டில், முப்பது சதவிகிதமாவது படத்தை பரவலாக கொண்டு செல்வதற்கு அவசியப்படுகிறது.சரியான தயாரிப்பு பின்புலம் இல்லாமல் இத்தகைய முயற்சிகளில் இறங்குவதென்பது நம் சூழலில் தற்கொலைக்கு சமம். எந்த வகையிலும் உயிர் தப்பிவிடக் கூடாதென்று எல்லா சக்திகளும் நெட்டித் தள்ளும். ஊதியம் இல்லாமல் வேலை பார்க்கலாம். ஆனால் நம்பிக்கை துரோகம், அவமானம், ஒவ்வொன்றுக்கும் பிச்சை எடுக்காத குறை என்று வெறும் அவநம்பிக்கையை மட்டுமே சந்தித்த காலம் செங்கடல். எனக்கிருந்த ஒரு சில மிகச்சிறந்த நட்புறவுகள் தோள் கொடுக்கவில்லையென்றால் இந்தப்படம் சாத்தியப்பட்டிருக்காது. ஒரு சிங்கிள் மதரின் போராட்டமாக கூட இந்தப் படத்தை பார்க்கலாம். குழந்தை தங்காதென்பார்கள், அபார்ட் செய்யென்பார்கள், குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாதென்பார்கள். குழந்தை பிறந்தால் தாய் செத்துவிடுவாள் என்பார்கள். பிறந்தவுடன், இது பெண்குழந்தை, கொன்றுவிடென்பார்கள். ஆனாலும் அந்த குழந்தையை தாய் மட்டுமே நம்பி, போராடி வளர்ப்பார். செங்கடலை எல்லோரும் கைவிட்டார்கள். நான் எப்போதும் விடவில்லை.
நீங்களே இந்தக் கதையில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள். உங்களையே நீங்கள் தேர்வு செய்து கொண்டதன் காரணம் என்ன?
செங்கடலின் மெடா பிக்ஷன், படம் நெடுக வரும் ஒரு ஆவணப்பட இயக்குனரின் பகுதி. அந்த கதாபாத்திரத்தை நானே செய்வது சரியென மனதில் பட்டது. செய்தேன். ஆனால் அது மணிமேகலை கதாபாத்திரம் தானே தவிர, நான் அல்ல.
டெல்லியில் இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் ஒரு பெரிய போராட்டம் நடத்தினீர்கள். அதை படம் பிடித்து வைத்திருந்து செங்கடலில் சேர்த்திருக்கிறீர்கள். டெல்லி போராட்டம் இதற்காகவே திட்டமிட்டு நடத்தப் பட்ட நாடகம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே. இதற்கு உங்கள் விளக்கம் என்ன?
டெல்லிப் போராட்டம் மிகச் சாதாரண ஒளிப்பதிவுக் கருவியால் திரைப்பட ஒளிப்பதிவாளரல்லாத ஒருவரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. படத்தில் இணைக்கும் போது இத்தகைய காட்சிகள் தொழில்நுட்ப ரீதியாக குறைபாடுள்ளவையாகவே இருக்கும். 500 துணைநடிகர்களை வைத்து செட் போட்டுக் கூட இந்தக் காட்சியை எடுத்துப் படத்தில் தொழில்நுட்பக் குறைபாடில்லாமல் இணைத்திருக்கலாம். கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் டூப் போட்டு எடுப்பதுதான் சிரமம் எழுத்தாளர்களை டூப் போட்டு எடுப்பது ஒன்றும் சிரமமல்லவே. ஆனால் முடிந்தளவு உண்மையான காட்சிகளையே பயன்படுத்த செங்கடல் விரும்பியது. அரசியல் இயக்கங்களின் போராட்டங்கள், கலைஞர் உண்ணாவிரதம், நடிகர் சங்க போராட்டம், முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் என. போர் நிறுத்தம் கோரிப் போராடிய உலகம் தழுவிய எல்லா எதிர்ப்பு இயக்கங்களையும் செங்கடல் பதிவு செய்கிறது. அதில் 30 நொடிகள் வந்து செல்கிறது டெல்லி போராட்டம். டெல்லி போராட்டக் குழுவில் இருந்த அநேகம் பேர் திரைப்படத்தைப் பார்த்து இதுவரை தங்கள் சாலிடாரிட்டியையே தெரிவித்திருக்கிறார்கள்.
நாலு பேர் சேர்ந்து ஏதாவது செய்தாலே, அங்கு குண்டு வைத்துவிட்டு ஓடி ஒளியும் நாசகார கும்பல் காலச்சுவடு. அதன் ஆள்காட்டி விரலை வெட்டியும், ஆணவம் அடங்கவில்லையென்றால், அதன் பின் நிற்கும் முதுகெலும்பில்லாத எழுத்தாளர்கள் தான் காரணம், திரைப்படம் தொடங்குவது, போர்க்காலங்களில், மொபைல் போனில் எடுக்கப்பட்ட போர்க்குற்றக் காட்சிகளோடு! இன்று இலங்கை அரசை சர்வதேச மனித உரிமை ஆணைய நீதிமன்றத்தில் நிற்க வைத்திருக்கும் ஃபுட்டேஜ். நீங்கள் பார்த்தீர்கள் தானே? ராணுவத்திடம் குண்டடி படுபவர்களிடமும், போர்க்குற்றம் புரியும் இலங்கை ராணுவத்திடமும் அனுமதி பெற்றீர்களா என்று காசு கண்ணன் கேட்டாலும் கேட்கக் கூடும்.
உங்கள் தனியறை காட்சி அவசியமா. ஒரு அரசியல் திரைப்படத்தில் நீங்கள் அப்படி தோன்றியிருப்பது பல்வேறு விமர்சனங்களை உண்டாக்கியிருக்கிறது. ஏன் அதைச் செய்தீர்கள்?
ஏங்க, இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சூரி, படம் முழுக்க அரை நிர்வாண்மாகத் தான வருவார். ஏதாவது கேள்வி வந்ததா? இலங்கை நேவி என்கவுண்டர் காட்சிகளில் ஆணுறுப்பு தெரியும் வகையில் நிர்வாணக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. தேவை கருதி தானே வைத்திருக்கிறோம், ஒரு பெண் கதாபாத்திரம், தன் தனியறையில் இருக்கும்போது உள்ளாடையோடு கண்ணாடியில் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருக்கிறார். இதில் ஏன் எல்லாருக்கும் பிரச்சினை வருகிறது. அரசியல் படமென்பதால், பெண் கதாபாத்திரங்கள் எல்லாம் பர்தா போட்டு கொண்டு வரவேண்டுமா?
சர்வதேச அளவில் இந்தப் படம் என்ன விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது?
டர்பன், டோக்கியோ, மாண்ட்ரியல், மும்பை சர்வதேச திரைப்பட விழாக்களில் போட்டிப்பிரிவில் பங்கு பெற்றது. டோக்கியோவில் சிறந்த ஆசியப் பெண் திரைப்பட விருதை வாங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக சியோல், தாய்பெய், பீஜிங். இஸ்ரேல் நாடுகளில் பங்கேற்கிறது. டர்பன் திரைப்படவிழாவில் செங்கடல் படத்தை பார்த்த ஐ. நா. சபையின் மனித உரிமை ஆணையாளர் திருமிகு. நவி பிள்ளை ”ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய கடலோர எல்லைப் பகுதியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் மனித உரிமை மீறலுக்கான ஒரு சாட்சியமாக, சமரசமற்ற குரலாக செங்கடல் ஒலிக்கிறது” எனக் குறிப்பிட்டார். இலங்கை அரசின் தமிழினப் படுகொலைகள் மீதான ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் விசாரணையோடு இந்திய மீனவர்களின் படுகொலை மீதான தலையீட்டிற்கும் ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார்.
சென்னைத் திரைப்பட விழாவில் உங்கள் படத்தை திரையிட அனுமதிக்கவில்லை. நீங்கள் போராடியே அனுமதி பெற வேண்டியிருந்தது? இது ஏன் நிகழ்கிறது? தொடர்ந்து இப்படி போராடிக்கொண்டே இருப்பது சோர்வைத் தரவில்லையா?
திரைப்பட விழாக்கள் முற்போக்கு மரபுவழி வந்தவை. அவற்றில் தணிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை. கருத்துச் சுதந்திரம் தான் ஒரு திரைப்பட விழாவின் ஆன்மா. அந்த பண்பாட்டை சீரழிக்க இடமளிக்க முடியாது. அங்கே படைப்பையும், படைப்பாளரையும் அவமதித்து விட்டு அதிகாரத்திற்கு என்ன வேலை? இந்த வருட இந்தியன் பனோரமாவில் தேர்வான ஒரே தமிழ்ப்படம் செங்கடல். ஆனால் விழாக்குழுவினர் இந்தியன் பனோரமாவில் தேர்வான மற்ற மொழிப்படங்களையெல்லாம் திரையிடும்போது, செங்கடலை விலக்கியது அப்பட்டமான தணிக்கை. தணிக்கையை சட்டப்போராட்டத்தில் வென்ற பின்னும், பனோரமா அங்கீகாரம் பெற்ற பின்னும், பண்பாட்டு வெளியில் தணிக்கை செய்வதென்பது எவ்வளவு மோசடி? அரசியல் விவாதத்திற்கு அஞ்சுபவர்கள் திரைப்பட விழா நடத்த வேண்டிய தேவையென்ன? மந்திரி விழா, முதல் மந்திரி ஆசி பெற்ற விழா, தயாரிப்பாளர்கள் சங்கமே கூடியிருக்கிற விழா அதனால் அவமதிக்க கூடாது என்று விழாக்குழுவுனர் சார்பாக சரத்குமார், சுகாசினி எல்லாம் பேசினார்கள். அதிகாரம் கையையும் வாயையும் கட்டிக் கொண்டு நிற்கும் இடம் தான் கலை. இதை இந்த சந்தை முதலைகளுக்கு நாம் கூப்பாடு போட்டுத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
படம் எடுக்க செலவிடும் ஆற்றலைவிட பல மடங்கு ஆக்டிவிசத்தில் தான் கழிகிறது. சோர்வு ஏற்படாமல் எல்லாம் இல்லை. ஒரு மூன்றாம் உலக, மேல் சாதியல்லாத, பணபலம்-ஆள் பலம்-அரசியல் பலம் எல்லாம் இல்லாத கறுப்பு பெண் சுயாதீன திரைப்பட இயக்குநராவதென்றால், எளிதாக நடந்துவிடுமா என்ன?
விடுதலைப் புலிகளுக்கு எதிரானது இந்தத் திரைப்படம் என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
விடுதலைப்புலிகள் எந்த மக்களுக்காக ஆயுதம் ஏந்தினார்களோ, அந்த மக்களையே மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்பதை பாதிக்கப்பட்ட மக்களின் வாய்மொழியாக கேட்டவள் நான். தமிழீழம் என்ற கனவு கொடூரமாக கலைக்கப்பட்டதற்கு இனவாத இலங்கை அரசாங்கமும், பிராந்திய அரசான இந்திய அரசாங்கமும் எவ்வளவு காரணமோ, அவ்வளவு காரணம் புலிகளும் தான். இந்த உண்மையை வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மக்கள் செங்கடல் மூலம் சொல்கிறார்கள். இதற்கு தார்மீகமான ஊடகமாக இருந்ததற்காக இனத்துரோகி, தேசத்துரோகி இன்னும் எல்லா பட்டங்களையும் ஏற்க நான் தயார். ஏனெனில் அனாவசியமாக ஒரு மனித உயிர் சாவதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அடித்தட்டு மக்களின் வாழ்வாதைகளுக்கும், இங்கு நடக்கும் அரசியலுக்கும், அது பாடும் போர்ப்பரணிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை சொல்ல எடுத்த முயற்சியே செங்கடல்.
சென்னைத் திரைப்பட விழாவில் உங்கள் படம் மட்டுமே அரங்கு நிறைந்த காட்சியாக நிகழ்ந்தது.. இது உங்களுக்கு என்ன உணர்வைத் தருகிறது?
மகிழ்ச்சி. செங்கடல் இன்னும் தமிழக திரையரங்குகள் தோறும் வினியோகிக்கப்பட்டு, அரங்குகள் நிறைந்தால் இன்னும் மகிழ்வேன். கடுமையான சென்சார் போராட்டத்தை அரச அதிகாரத்தோடு, சட்டத்தின் உதவி கொண்டு தொடுக்க முடிந்தது. ஒரு வெட்டு கூட இல்லாமல், திரைப்படத்தின் ஆன்மா கெடாமல் வெளியே கொண்டு வர முடிந்தது. ஆனால் சந்தை என்ற அசுர சக்தி ஆளையே தடயமில்லாமல் அழிக்கவல்லது. ஆனாலும் பின்வாங்குவதாக இல்லை. கிரவுட் ஃபன்டிங் (crowd funding) மூலம் கழைக்கூத்தாடியின் உண்டியலை கையிலெடுக்கிறேன். என் பார்வையாளர்களை பவர் புரோக்கர்ஸின் உதவி இல்லாமல் நேரடியாக இன்டர்நெட்டில் சந்திக்கிறேன். மக்களே படத்தின் விநியோகத்தைக் கையிலெடுத்து செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருக்கிறேன். அறிவிப்புச்செயதி கூடிய விரைவில் வரும்.
A Conversation about Sengadal – Rediff.com
http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-south-interview-with-leena-manimekalai/20111230.htm
Last updated on: December 30, 2011 13:56 IST
Shobha Warrier in Chennai
The average cinemagoer in Tamil Nadu might not even have heard of a film called Sengadal –The Dead Sea.
But the film was the only Tamil entry at the International Film Festival of India in Goa this year.
It has also won several international awards. More than a film, it is a political statement by Leena Manimekalai, an engineer-turned-filmmaker. The film is about the sufferings of fishermen caught in the Sri Lankan ethnic crisis.
Though Sengadal is her first feature film, Manimekalai has made 10 documentaries and won several awards at various international film festivals and has just been selected for the Charles Wallace Fellowship.
Before leaving for London for the fellowship programme on documentary film-making, Manimekalai spoke to Shobha Warrier on how Sengadal was made and received.
What was the inspiration behind Sengadal? Is it the culmination of all the documentaries you have made so far?
As I come from a political family of Communists, I was directly and indirectly involved with the Sri Lankan crisis throughout my youth. I was part of a group that was involved in the anti-war movement and India’s stance in the war. Documentary filmmaking was an extension of my activism.
In 2009, the ethnic crisis in Sri Lanka was at its peak. The air you smelt and the noise you heard were filled with human cries. I could not but get involved in it more directly. That was how I got involved with the fishermen’s movement. The stories the fishermen and women from the Rameswaram area shared with me were horrifying. Every household had lost at least one person to the sea.
I wanted to convey through the film that they wanted to live in peace and be treated like human beings. My film is a documentation of the time from January to May 2009.
Did the line between documentary and feature film blur while making Sengadal?
You may wonder whether it is real or captured. That is very intentionally done. I wanted to capture the lives of those people and whatever tools helped me as a filmmaker, I used them.
Did you use real people in the film?
Yes, there were no actors in my film; all are real people. It is actually a community participatory work.
Why do you then call it a feature film, and not a documentary?
Because it is not a documentary. I had made 10 documentaries before, and I would call a documentary, a documentary. This film is based on a bound script. I only used real people to act in my film, that’s all. We had a series of workshops to teach them how to act in front of the camera.
Image: A scene from Sengadal
What kind of ground work did you do before you started making the film?
It took six months of research and 100 hours of sharing their stories. I interviewed hundreds of fishermen and women, police officials, intelligence officials. Through NGOs, I visited refugee camps.
How difficult was it?
It was very difficult, as difficult as the fishermen’s lives. There is a meta-fiction of a filmmaker in the film. A filmmaker is trying to film the fishermen’s lives and she gets constantly interrogated and harassed, her tapes were confiscated and she fails to make the film.
But you made the film…
It almost happened with me. Every time I went to do research, I was stopped by the Navy, police, etc. I only had the love and trust of the fishermen and nothing else. That’s from where I gained courage and it saved me from many critical issues.
It was a community participatory work. Every scene and dialogue was drawn from their lives. When we were shooting in the sea and when a Navy plane flew over us, the fishermen hid us film-makers under a net.
Image: A scene from Sengadal
Why did you call the film Sengadal which means ‘red sea’? Is it symbolic of the blood that has become part of the sea?
It is a Biblical allusion. In the Bible, it is the Red Sea, but I gave it the meaning of Dead Sea or Sava kadal, the sea that kills people. It is like Moses helping his people cross the sea. Here, the Tamil fishermen cross the sea to India hoping for a better life but the situation is worse here.
There is a dialogue in the film that the refugee camps are no better than an Army camp. The camps smell of dead bodies and there are crows, vultures, and dogs vying for the dead bodies. Death is in the air.
There is also the possibility of interpreting it as the sea filled with the blood of fishermen.
You had a lot of problems with the Censor Board.
I had problems with the producers too. Film director Samuthirakani was the producer initially. But he withdrew after six days of shooting as there was a conflict between independent film-making and people from the industry.
But I could not stop shooting. So, I begged all the people I knew, my friends and relatives, to contribute. After 11 days of shooting, there was no money and we stopped shooting and came back to Chennai.
I showed whatever we had shot to many people, including Janaki Sivakumar, wife of the chief engineer at A R Rahman’s studio. She helped me by collecting money and becoming the producer. I did the rest of the shooting with her support.
It took me another seven to eight months to complete the post-production work. It was only ready in January 2011.
When I took the first copy to the Censor Board they said the film was not qualified to be exhibited in public for three reasons: it makes denigrating statements about the Indian government, about the functioning of the Sri Lankan government, and the dialect of the fishermen is unparliamentary.
I went to the Appellate Tribunal. They asked the Central Board of Film Certification to re-examine the film. Leela Samson became the head of CBFC by then and the film was given a certificate without any cuts but with an A certificate. I had to negotiate the corridors of power single-handed.
Image: A scene from Sengadal
After that, Sengadal went to quite a few international film festivals and won awards too…
It was premiered in the official competition at the 32nd Durban International Film Festival. Then, it was the official selection for the First Film Competition at the 35th World Montreal Film Festival. It won the NWAFF Award at the Tokyo International Women’s Film Festival.
In the International Competition at the Mumbai Film Fest, MAMI, Sengadal was the only Indian film. At the International Fishermen’s film festival in France, it was the opening film. They have subtitled it in French.
What was your feeling when it was selected as the only Tamil film in the Indian Panorama at the IFFI, Goa?
It was a pleasant surprise, because it is a political film and is very critical of the Indian government. And the Indian government choosing it as the best Tamil film gives you hope that there is democracy in this country. It gives you a huge hope that the lives of fishermen, treated as of no value, is after all important.
Image: A scene from Sengadal
How was the response in Goa?
Tremendous. More than that, this film has given me space to talk about the issue. Fishermen on all the borders in the world face the same plight.
How did the Tamil film industry react to your film?
This is how they reacted: at the Chennai Film Festival, all the films shown in the Indian Panorama at Goa were shown, except Sengadal. They were scared because it talks politics directly. There was censorship at the festival, which angered me.
Film festivals generally show provocative films. It’s a place where you can breathe freedom. So, on the opening day, I protested. After the protest, it was shown.
When do you plan to release the film?
I plan to release it on the Internet where there are no powerbrokers like the distributors and theatre owners in between. I can then market it in the social media.
Image: A scene from Sengadal
காடெல்லாம் நெருப்பு கடலெல்லாம் காவல்
செங்கடல் திரைப்பட விமரசனம் – ஆதவன் தீட்சண்யா
நன்றி: செம்மலர், ஜனவரி 2012
அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசவேண்டும். ஆமாம் எப்படியாவது பேசித்தான் ஆகவேண்டும். ஆனால்அது ஒன்றும் எளிதல்ல. எனவே தான் அப்படியான இக்கட்டான நேரங்களில் பலரும் பம்மிப் பதுங்கி பல்லிளித்து நாவொடுங்கி நமத்துப்போய் விடுகிறார்கள். ஆனால் எளிய மக்கள் மீதுள்ள அக்கறைகளினால் மட்டுமே உந்தப்பட்டு களமிறங்குகிறவர்கள் உண்மையைத் துணிந்து பேசிவிடுகிறார்கள்-அதன் விளைவுகளை அறிந்திருந்தும். கூட.செங்கடல் படத்தை முன்முடிவுகளற்று பார்க்கிற எவரொருவரும் இவ்வாறே விளங்கிக்கொள்வாரென நினைக்கிறேன்.
தான் பேசவந்தப் பொருளோடு தொடர்புபட்டுள்ள இந்திய மற்றும் இலங்கை அரசுகள், இவ்விரு நாடுகளின் கடற்படை மற்றும் காவல்துறை, வாய்ச். சவடால் கட்சிகள்,தொண்டு நிறுவனங்கள், மதம் என்று சகல அதிகார மையங்களையும் அம்பலப்படுத்திவிடுகிற இப்படத்திற்கு உடனடியாக. தணிக்கைச்சான்று வழங்கப்படாதது இயல்பே. நெடும் போராட்டத்தினூடே ஒரு வெட்டுகூட இல்லாமல் தணிக்கைச்சான்று பெற்றுவிட்ட போதிலும். வெகுஜனத் திரையிடலுக்கு அனுமதி கிட்டாததும், அப்படியே ஒருவேளை கிடைத்தாலும் வெளியிட விநியோகஸ்தர்களோ திரையரங்குகளோ. கிடைக்காமல் போவதிலும் ஆச்சர்யப்பட எதுவுமில்லை. எந்திரன், ஏழாம்அறிவு
போன்ற பெருங்கேடுகளால் தனது நுரையீரலையும் இருதயத்தையும் அழுகவிட்டிருக்கிற தமிழ்த்திரைத்துறை, செங்கடல் என்கிற – தலைப்பிலிருந்தே பிரச்னைகள் தொடங்கிவிடுகிற- ஒரு படத்தை வெளியிடுவதற்கான துணிச்சலை திடுமெனப் பெற்றுவிடாது.
இது ஒரு கதையா என்று நினைப்பு வரும் தருணத்தில் இடைமறித்து – இல்லை நீவாழும் காலத்தில் உன் கண்முன்னே நடந்து கொண்டிருப்பவை என்று. செவிட்டிலறைந்தாற் போல சொல்லி விடுகிற உண்மைச் சம்பவங்களும் ஆவணங்களும் இடம் பெறுவதும்,இந்தப் பாடுகளிலிருந்து விடுபட்டு சாந்தமாய். வாழ்ந்துவிடும் மனிதப் பெருங்கனவு மணிமேகலை,சூரி, சித்தார்த் என்கிற ஆமை போன்றவற்றினூடாக குறியீட்டுத்தன்மை கொண்டதொரு புனைவாகி. இழைவதுமான படமாக்கல் முறை, படம் பேசும் அரசியலுக்கு நம்பகத்தன்மையை வழங்குகிறது. ராமேஸ்வரம் மீனவர்களும் ஈழ அகதிகளுமே. கதாபாத்திரங்களாக பங்கேற்பதும் அவர்கள் சினிமாவுக்கான தரப்படுத்தப்பட்ட மொக்கை மொழியில்அல்லாமல் தத்தமது மொழியிலேயே அதன். வீரியத்தோடு பேசுவதனாலும்படத்தின் இயல்புத்தன்மை கூடுகின்றது.
எரிபொருளும் ஆயுதமும் கடத்திவந்து விடுதலைப்புலிகளுக்கு தருவதற்காக ஒருசில மீனவர்கள் எல்லைத் தாண்டியிருக்கலாம். ஆனால் அதற்குரிய. தண்டனை கொலையா என்ன? ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும் மே2009ல் புலிகள் அழிக்கப்பட்டு- ஆயுதமோ எரிபொருளோ கடத்துவதற்கான. தேவையே இல்லாத நிலையில் இப்போதும் ஏன் கண்ணில்படுகிற தமிழக மீனவர்களையெல்லாம் கொல்கிறது இலங்கை கடற்படை? நிராயுதபாணிகளான மீனவர்களை கடற் பரப்பில் மறித்து நிர்வாணமாக்கி, பச்சைமீனை தின்னவைத்து, சிறுநீரை குடிக்க வைத்து, சித்திரவதை செய்து குற்றுயிரும் குலையுயிருமாக துரத்தியடிப்பதை அவர்கள் எதன் பேரால் நியாயப்படுத்தி விடமுடியும்? முப்பதாண்டுகளாக இலங்கையில் தமிழர்களைக் கொன்றொழிக்கப் பழகிய சிங்கள வெறியூறிய ராணுவமனம் அங்கு போர் முடிவுக்கு வந்தநிலையில் இப்போது தமிழகமீனவர்களைக் கொன்று தனது வெறியைதணித்துக்கொள்கிறதா?கொலைகார இலங்கையை அதட்டி தனது மக்களது உயிரைப் பாதுகாக்க இந்திய அரசாங்கம் ஏன் முன் வர மறுக்கிறது? இந்திய அரசாங்கத்திற்கு அப்படியொரு நெருக்கடியை உருவாக்க தமிழ்நாட்டின் வீராவேசக் கட்சிகள் ஏன் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லைஎன்பதான கேள்விகளை பார்வையாளரிடம் தன்னியல்பில் உருவாக்கிச்செல்கிறது செங்கடல்.
இலங்கை ஆட்சியாளர்களின் இனவெறிக்குத் தப்பி ஐரோப்பாவுக்கும், கனடாவுக்கும் பறந்தோட கதியற்ற தமிழர்கள் தமிழ்நாட்டிலிருக்கிற அகதி முகாம்களில் தான் அடைக்கலம் புக வேண்டியிருக்கிறது. தானே புயலால்பாதிக்கப்பட்டுள்ள கடலூரிலும் புதுச்சேரியிலும் ஒரு லிட்டர் பாலை 50ரூபாய்க்கு விற்கிறவர்களைப் போன்ற ‘பச்சைத்தமிழர்’கள் இலங்கையிலும் இருப்பார்கள் தானே? அவர்கள், உயிர் பிழைத்தால் போதுமென ஓடிவரும் தமிழரிடம் ‘குழந்தைக்குக்கூட பத்தாயிரண்டு வாங்கிட்டு’ கள்ளத்தோணியிலஏற்றி இந்தியக் கடற்பரப்பின் ஏதாவதொரு மணற்திட்டில் வீசிவிட்டுப் போய்விட, இரக்கமனமுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் தான் தமது படகுகளில் ஏற்றி கரைக்குகொண்டு வந்து சேர்க்கிறார்கள். இதில் வேறெந்த ஆதாயத்தை விடவும் சகமனிதர்கள் மீதான பரிவே பிரதானமாக தொழிற்படுகிறது என்பதற்கான உதாரணம் தான் அரிச்சல் முனையில் வந்திறங்கும் குடும்பத்தாருக்கு மீனவர் மாணிக்கம் தூக்கு வாளியிலிருக்கும் தனது கஞ்சியைக் கொடுப்பது.
காத்த சுவாசிக்கப் போனா கந்தக நாத்தம், நீரெல்லாம் நெருப்பா ஓடுது,நிலத்துலகூட கண்ணிவெடி… அங்க எப்படிய்யா இருக்கிறது? இயலாமத்தான்இங்க ஓடிவந்தமய்யா…’ என்று கதறிக்கொண்டு இலங்கை எல்லையிலிருந்து தப்பிதனுஷ்கோடிக்கு வந்துவிட்டதைத் தவிர அந்த வறிய \தமிழர்களுக்கு இங்குவேறேந்த ஆறுதலுமில்லை.‘இந்திய அரசாங்கம் உங்கள நல்லாப் பாத்துக்குமா?’என்ற கேள்விக்கு கொல்லாதுன்னு நம்புறோம் என்று பதிலளிக்கிறார் ஒருஅகதி. ஆமாம், கொல்லப்படவில்லையே தவிர மனித மாண்புகளுக்கு சற்றும்பொருந்தாத வகையில்தான் இந்திய/ தமிழக மண்ணில் நடத்தப்படுகின்றனர்.ஆண் பெண் அனைவரையும் காவல் நிலையத்தில் நிர்வாணமாக்கிச்சோதனையிடுவது,‘முட்டி பலமாக காய்ச்சியிருந்தாலே புலிகள்தான்’ என்று சந்தேகத்தில் சிறையிலடைப்பது, ஆபாசமாகத் திட்டுவது, முகாமை விட்டு வெளியே வந்து உலவினாலே பிடித்துவைத்துக்கொண்டு லஞ்சத்திற்கு விடுவிப்பது என்று கண்கொண்டு காணவியலாக் கொடுமைகள் நிகழ்வதை செங்கடல்சமரசமின்றி அம்பலப்படுத்துகிறது.
ஏழேழு பிறப்பெடுத்தும் ஈழத்தமிழர்க்காகவே பேராடுவதாக கர்ஜிக்கிற மைக் முழுங்கிகளில் ஒருவரும் இந்த ஏழை அகதிகளைஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பிஸ்கட் இல்லாதவர்களிடம் குழையவேண்டியதில்லை என்பதை தெரிந்துவைத்திருக்கிற நாய்கள் வாலை வேறுமாதிரியாக ஆட்டுவது உலகியல் வழக்குதானே. அகதிகள் மனிதர்களாக நடத்தப்படுவதை உறுதி செய்வதில் மனித உரிமை அமைப்புகளோ வேறு மக்கள் இயக்கங்களோ அக்கறை காட்டாததால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பும் ரோஸ்மேரி போன்றவர்கள் தமது மட்டுப்படுத்தப்பட்ட எல்லைக்குள் சுருங்கிவிடவே நேரும் என்பதை படம் ஒரு எச்சரிக்கை போல உணர்த்துகிறது.
‘பகலையில் நேவிக்காரங்கள் வர்றாங்கள், எந்த வட்டுல குமரிபுள்ளைக இருக்குன்னு பார்த்துட்டுப் போறாங்கள்…ராவுல வர்றாங்கல்… சத்தமும் போடஇயலாது, கூக்குரலும் போட இயலாது.. காசு வாங்காத வேசிகள் மாதிரிகண்ணைப் பொத்திக்கொண்டு காதை மூடிக்கொண்டு பாயில படுத்துக்கிடக்கவேண்டியதுதான்… கற்பத்தடை மாத்திரைகூட கடையில் சரியான தட்டுப்பாடு… ’‘இளங்காளைப் பயலுகளயெல்லாம் கொல்றாங்க…’ என்று அகதிகளாக வந்திறங்குகிறவர்கள் போலிஸ் விசாரணையின் போது தெரிவிக்கும் தகவல்களிலிருந்து இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்புணர்வுகளையும் தாக்குதல்களையும் கொலைகளையும் சொத்தழிப்புகளையும்
அதன் தீவிரத்தோடேயே பார்வையாளர்களால் உணர்ந்துவிட முடிகிறது.‘இலங்கை அரசாங்கம் ரசாயன குண்டு வச்சிருக்குன்னு நீங்க நம்பறீங்களா?’.ஒரு அகதியின் பதில் -நீங்க கொடுத்திருந்தா அவங்க வச்சிருப்பாங்க… ’இலங்கை ஆட்சியாளர்களின் இப்படியான அட்டூழியங்களுக்கு இந்திய அரசும் துணையாக இருந்ததை அம்பலப்படுத்த இந்த ஒரு காட்சி போதுமானதாக இருக்கிறது.
சர்வதேச நீதிமன்றங்கள் இலங்கை ஆட்சியாளர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்குமோ மாட்டாதோ, ஆனால் மக்கள் மன்றத்தில் நிரூபிப்பதற்கான ஆவணமாக செங்கடல் உருவாகியுள்ளது. இறுதிக்கட்டத்தில் நடந்தது யுத்தமா படுகொலையா என்கிற கேள்வியை எழுப்பும் படம், அது படுகொலைதான்என்று நிறுவுவதற்கான பலத்துடன் இருக்கிறது. இவையெல்லாவற்றையும் புறந்தள்ளி இழிவுபடுத்துவார்கள் என்று தெரிந்திருந்தும்கூட புலிகளின் மீதான விமர்சனத்தையும் செங்கடல் முன்வைக்கத் தயங்கவில்லை. இலங்கைகடற்படையை எதிர்த்துப் போராட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆயுதம்வழங்கவேண்டும் என்று தொடங்குகிற படம் அரசாங்கத்திடமிருந்தும் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்கிற கனவை வெளிப்படுத்துவதில் முனைப்பு கொள்கிறது.
மனிதகுலத்தின் இந்தப் பெருங்கனவை திரைப்படுத்துவதற்காக லீனா மணிமேகலை- ஷோபாசக்தி- ஜானகி சிவகுமார் குழுவினர் மேற்கொண்ட அயரா முயற்சியினால் இன்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் செங்கடல் திரையிடப்படுகிறது. மதிப்புமிக்க பலவிருதுகளைப் பெற்றுக்கொண்டும் வருகிறது. இராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் ஈழத்தமிழ் அகதிகளின் பிரச்னைகள் சர்வதேச அரங்குகளில் விவாதப்பொருளாய் மாறுவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ள இப்படத்தை வெகுமக்கள்மத்தியிலே திரையிடுவதற்கான சாத்தியங்களை கண்டறிவதானது, கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட யாவரது கடமையாகவும் இருக்கிறது.
புது எழுத்தில் வெளியான கவிதைகள்.
அந்தரக் கன்னி
1
அவள்
அந்தரக்கன்னி
வேரிலும் பழுப்பாள்
இலையிலும் பழுப்பாள்
காயிலும் பழுப்பாள்
கொம்பிலும் பழுப்பாள்
வேடராக வரும்போதெல்லாம்
தேனாக விளைய மாட்டாள்
அவள்
கண்ணைக் குத்தி மீன் பிடிப்பது கடினம்
அவள்
குலவையிடும்போது மட்டும் தான் மழையறுக்க முடியும்
கையேந்தி நிற்கும் நட்சத்திரங்களுக்காக
மலையேற மறுக்கும்
அவள்
துத்திப்பூ சூடி வந்தால்
கொங்கைகளை பெருக்குவாள்
தாயார் விளக்கில் மிளகு திரி போட்டு வைத்தால்
முப்போகம் ப்யிரளப்பாள்
லிங்கம்
அவளின்
பதினோராவது விரல்
நாவற்ற அதன் வாய்க்கும்
வெற்றிலை பூசுவாள்
வேண்டும் போது
கோணக் குச்சியாக்கி
உறுமி கொட்டிக் கொள்வாள்
2.
அவள் குத்தியிருக்கும் பச்சையில்
கிளிகள் உறங்குகின்றன
வரகு அவிக்கும்போதெல்லாம்
அவற்றை எழுப்பி
ஊன் தருவாள்
அவை பறக்கும் திசைகள் தோறும்
முளை பாவ நார் கிளம்பும்
அம்மனுக்கு கால் முளைக்கும்.
அவள்
தலையில்
பூ மணக்க மணக்க
ஊரேகும் காவடி
3.
தாச்சியும் அவள் தான்
காவலாளியும் அவள் தான்
வெள்ளிமலையில் தீயெரிய
முட்ட முட்ட கடலை தின்பாள்
காலாட்டுமணி கையாட்டுமணி
அத்தலு புத்தலு
மக்கா சுக்கான்
பாலு பரங்கி
நட்டம் சுட்டம்
சீ ……சல்….. லே…… டு
லீனா மணிமேகலை
நன்றி தோழர் மனோன்மணி