அடுத்து என்ன?
நன்றி –விகடன் தடம் 01/05/2017
படைப்பியக்கம் என்பது படைப்பதைவிட காத்திருத்தல் தான் என்று ஆழமாக நம்புகிறேன். படைப்பின் உன்னத தருணங்களை அந்தக் காத்திருப்பே பெற்றுத் தருகிறது. கதாபாத்திரங்களின் இசைவுக்காக, அவர்கள் பகிரும் வாழ்க்கையின் அதி அந்தரங்கத் துண்டுகளுக்காக, கண்களில் நிறையும் நம்பிக்கைக்காக, ஈரம் கூடிய கைப்பற்றுதலுக்காக, ஒளிக்கீற்றுகளின் சாய்வுக்காக, இதயத்தின் அடுக்குகளில் இருந்து கிளம்பும் குரலுக்காக நான் காத்திருக்கிறேன்.கால தூரங்களை அந்த காத்திருப்பின் சுகத்தில் கடக்க முயற்சிக்கிறேன்.
2014-ல் தொடங்கிய “ரேப் நேஷன்” என்ற என் முழு நீள அபுனைவு திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறேன்.
“என்னை நிர்வாணப்படுத்துவதாலும், என் உடலில் மின்சார அதிர்ச்சியை கொடுப்பதாலும், என் உறுப்பில் கற்களையும் போத்தல்களையும் நுழைத்து துன்புறுத்துவதாலும் இந்த நாட்டின் நக்சல் பிரச்சினைகளை நீங்கள் ஒழித்துவிடமுடியுமா” என்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியை நோக்கி கேள்வி எழுப்பினார் சோனி சூரி. சத்தீஷ்கரின் பஸ்தரில் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த சோனி சூரியை நக்சல்பாரியின் அனுதாபியென சந்தேகித்து கைது செய்த போலீஸ், சிறையில் வைத்து அவரை பலாத்காரம் உட்பட பல கொடுமைகளுக்கு உட்படுத்தியது. அவரின் மீதான பொய் வழக்குகள் சட்டரீதியாக முறியடிக்கப்பட்டாலும் அவரை சிறையில் வைத்து சித்ரவதை செய்த “அங்கித் கர்க்” என்ற போலீஸ் அதிகாரியின் மீது ஒரு எஃப். ஐ.ஆர்( FIR) கூட பதிவு செய்யமுடியாத சூழ்நிலை தான் இந்நாட்டில் நிலவுகிறது. சோனி சூரியின் யுத்தம் இன்று தனக்கான நீதிக்கானது மட்டுமல்ல. நக்சல்பாரிகளை அடக்குகிறோம் என்ற பேரில் இந்தியாவின் சிவப்பு பூமியான பஸ்தரின் ஆதிவாசி பெண்களுக்கு காவல் துறை சதா இழைக்கும் அத்தனை கொடுமைகளுக்கு எதிரான யுத்தம்.
“பதினேழு வயதும் ஐந்து மாத கர்ப்பிணியுமான என் மனைவியை முஸ்லீம் என்பதாலேயே பலாத்காரம் செய்து கைக்குழந்தையையும் உறவினர்களையும் அவர் கண்ணுக்கு எதிரில் கொன்று குவித்த மத வெறியர்கள் தான் பாவிகள், என் மனைவி அல்ல” என்ற தீர்க்கமான குரலுக்கு உரியவரான யாகூப் ரசூல், 2002 குஜராத் கலவரத்தின் போது தாக்கப்பட்ட பில்கிஸ் பானுவின் கணவர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு மதக்கலவரத்தின் போது நடந்த பாலியல் பலாத்காரத்திற்கான வழக்கில், 20 குற்றவாளிகளில் 13 பேருக்கு கடும் தண்டனைகளை வென்ற வரலாறு பில்கிஸ் பானு மற்றும் அவரின் கணவர் யாகூப்பினுடையது. மோடியின் அரசாங்கத்தில் நீதி கிடைக்காது என்பதால், மும்பை நீதிமன்றத்தில் விடாது போராடி வழக்கை வென்றதோடு, காவிக்கறை படிந்திருந்தாலும் தாங்கள் வாழ்ந்த வடோதராவிலேயே துணிச்சலாக வாழ்க்கையை தொடரும் பால் வியாபாரியான யாகூப்பும் அவரின் நான்கு குழந்தைகளுக்கு தாயுமான பில்கிஸ் பானுவும், கொத்துக் கொலைகாரர்கள் ஆளும் இந்த நாட்டில் இன்னும் நீதி சாகவில்லை என்பதற்கான சான்று.
“ஒரு கீழ்ச்சாதிப் பெண்ணை மேல்சாதி ஆண்கள் எப்படி தொடுவார்கள்? தலித் பெண்ணான பன்வாரி தேவியை மானபங்கப்படுத்தினார்கள், அதுவும், அவரின் கணவர் மற்றும் உறவினரின் கண் முன்னே நடந்தது என்பதை எப்படி நம்புவது?” என்று மாவட்ட நீதி மன்ற மாஜிஸ்திரேட் வழக்கை தள்ளுபடி செய்ய, ராஜஸ்தானில் மனித உரிமைப் போராளிகளும், பெண்ணிய செயல்பாட்டாளர்களும் பெரும் எழுச்சியோடு ஒன்று சேர்ந்து போராடி, உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக இந்த நாட்டிற்கு விஷாகா ஜட்ஜ்மென்ட்டை பெற்றுத் தந்தார்கள். உயர்சாதியினர்,அவரின் நடத்தையைக் குறித்து அபாண்டமான குற்றச்சாட்டுகளை வீசி அவரை ஊரிலிருந்தே விலக்கி வைத்தாலும்,தனக்கு நேர்ந்த அநீதியை துணிச்சலாக வெளி உலகத்திற்கு சொன்னதோடு, இறுதி வரை உறுதியாக களத்தில் நின்றதால் தான் பன்வாரி தேவியால் இந்திய நாட்டின் அனைத்து உழைக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கான உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பெற்றுத்தர முடிந்தது. அரசாங்க அலுவலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் ஒரே ஒரு பெண் வேலை செய்தாலும் அங்கே பாலியல் வன்முறையை முறையீடு செய்வதற்குரிய விசாகா செல் அமைக்கப்பட வேண்டும் என்று விசாகா தீர்ப்பு வலியுறுத்துகிறது. சமீபத்தில் சத்யஜித் ரே திரைப்பட கல்லூரியின் மாணவிகள் இந்த தீர்ப்பின் துணைகொண்டே தங்களிடம் பாலியல் அத்துமீறல்கள் செய்த பேராசிரியர்கள் மீது முறையிட்டு நீதி பெற்றுள்ளனர்.
இந்திய இறையாண்மையைக் காக்கும் பொருட்டு வடகிழக்கிலும், காஷ்மீரிலும் ராணுவத்திற்கு அதிகபட்ச அதிகாரங்களை வழங்கும் “Armed Forces Special Power Act”(AFSPA) அந்தப் பகுதி பெண்களின் உடலை சூறையாடும் அதிகாரத்தையும் கூடவே வழங்கியிருக்கிறது. 2004 – ல், மாவோயிஸ்ட் என்று சந்தேகப்படுகிறோம், விசாரிக்க வேண்டும் என்று தன் வீட்டிலிருந்தே அழைத்து செல்லப்பட்ட மனோரமா மறுநாள் யோனி சிதைக்கப்பட்ட நிலையில் மலையடிவாரத்தில் இறந்துக்கிடந்தார். மணிப்பூரின் தாய்மார்கள் தங்கள் மகள்களை விட்டுவிடுமாறும் முடிந்தால் தங்கள் மேல் கைவைத்துப் பார்க்குமாறும் முழக்கமிட்டு அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் கூடாரத்திற்கு முன் நிர்வாணப்போராட்டம் நடத்தினார்கள். மணிப்பூர் வெடித்தது. அன்று இயக்கமாக ஒன்றிணைந்த தாய்மார்கள் இன்றுவரை மணிப்பூரின் முக்கிய அரசியல் செயற்பாட்டாளர்கள். மணிப்பூரிலிருந்து முற்றிலுமாக ராணுவத்தை வெளியேற்றி, AFSPAவை செயலிழக்கச் செய்யும் வரை ஓயமாட்டோம் என்ற அந்த தாய்மார்களின் குரல் வடகிழக்கு மற்றும் காஷ்மீர் பெண்களின் ஒட்டுமொத்த குரல்.
தான் பெற்ற மகளையே வல்லுறவு செய்ததால் கன்னூரில், ஆயுள் தண்டனை சிறைக்கைதியாக இருக்கும் ஹாரிஸ் தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் மன்னிப்பு கேட்டு நாள்தோறும் கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். தன் தந்தையையே எதிர்த்து காவல் துறையில் முறையீடு செய்ததால், தங்கள் கிராமத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு வழியில்லாமல் வெளியேறி அரசாங்கத்தின் நிர்பயா ஆதரவு இல்லத்தில் தன் தாயார் மற்றும் தங்கை தம்பிகளோடு அடைக்கலம் புகுந்தார் பதினாறு வயதேயான ரெஹனாஸ். இன்று சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ரெஹனாஸ் தன் சுயசரிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். படித்து முடித்து சட்ட வல்லுனராகி பாலியல் வன்முறைக்குள்ளாகும் சிறுமிகளுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே அவரின் கனவு.
ரேப் நேஷன் திரைப்படத்திற்காக கடந்த மூன்றரை வருடங்களாக ரெஹ்னாஸின், சோனி சூரியின், பன்வாரி தேவியின், பில்கிஸ் பானுவின், மணிப்பூர் தாய்மார்களின் இயக்கத்தின் கைகளைப் பிடித்து அலைந்துக்கொண்டிருக்கிறேன். எல்லோரும் எல்லாமும் கைவிட்டாலும் விடாமல் போராடி நீதியை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் இந்தப் பெண்களின் நிழலில் தான் எமது நாளைக்கான தரு கிளைக்க வேண்டும். பெண்ணின் உடலை தங்களின் அதிகாரத்திற்கான கொடிக்கம்பமாகப் பார்க்கும் சமூகமும், நாடும், குடும்பமும், கலாசாரமும், மதங்களும், சாதிகளும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பெண்ணினத்தை நூதனமாக காவு கேட்கின்றன. படத்தொகுப்பு வேலைகளில் இருக்கும் எனக்கு இந்தப் பிரபஞ்சமே ஒரு மாபெரும் பலிபீடமாக காட்சியளிக்கிறது. என் தலையை அவ்வப்போது தொட்டுப்பார்த்துக் கொள்கிறேன். கண்ணீரும் உதிரமும் விந்துவுமாக வீச்சமடிக்கும் இந்தக் கதைகளில் என் வியர்வையையும் சேர்க்கிறேன். நிச்சயமாக எழுவேன். எழுவோம். இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வர இருக்கிறது ரேப் நேஷன்.
எனக்கெனப் பருவகாலங்கள் தனியே இருக்கின்றன. எந்தப்பிடிமானமும் அற்று திசை குழம்பி திரியும் காலம் எனக்கு கோடை. தணிக்கவே முடியாத மூர்க்கமான தாகத்திலும் வெப்பத்திலும் உடலையே ஓடையாக்கி ஓடினாலும் அடங்காத அநாதி காலமது. எங்கிருந்தோ பொத்துக்கொண்டு ஊற்றுவதைப்போல மளமளவென இயங்க முடிவது எனக்கு கார்காலம். இலக்கு சுடர்விட்டு எரியும். எஃகு போல என் எல்லா விசைகளையும் முடுக்கி விரைவேன். எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாதென்ற தினவை மூன்று வேளையும் உண்பேன். வாசிப்பாலும், வாழ்க்கையாலும், பயணங்களாலும் பொறுக்கியதையெல்லாம் அடைகாக்கும் காலம் வசந்த காலம். உருட்டி உருட்டி எல்லாவற்றையும் விதைகளாக்கி என் கண்களுக்கு மட்டும் தெரியும் சாடிகளில் பாதுகாத்து வைப்பேன். என் விதைகளுக்கேற்ற நிலங்கள் எங்கோ என் வருகைக்காக காத்திருக்கின்றன என்ற நினைப்பின் மந்தகாசத்தில் மிதப்பேன். எல்லாம் இருந்தும் எதிலும் பற்றில்லாமல், ப்ரியங்களை அண்டவிடாமல் ஒரு துறவி போல மௌனத்திற்குள் அடைக்கலமாகி விடுவது எனது இலையுதிர்காலம். இறுமாப்புகளை உதிர்த்த பட்ட மரம், தருவதற்கும் பெறுவதற்கும் ஏதுமில்லாமல் வெட்ட வெளியில் நின்றுக்கொண்டிருப்பதான படிமமாக என்னை நினைத்துக்கொள்வேன். காலையில் கோடையையும், கருக்கலில் வசந்தத்தையும் , இரவில் மழையையும், ஜாமத்தில் இலையுதிர்வையும் உணரும் கிழமைகள் உண்டு.
கடந்த சில வருடங்களாக, உலையில் கொதிக்கப் போட்டிருந்த திரைக்கதைகளில் ஒன்று தான் அடுத்து நான் இயக்கவிருக்கும் “சூரியரேகை”( The Sunshine) என்ற முழுநீளக் கதைப்படம். 2010-இல் தாய்லாந்து துறைமுகத்திலிருந்து கிளம்பிய SunSea என்ற சரக்கு கப்பலில் 492 ஈழத்தமிழ் அகதிகள் கனடா நோக்கி பயணிக்கின்றனர். பயணிகள் அவசரத்திற்கு மூத்திரம் போகக்கூட அடிப்படை வசதிகள் கூட இல்லாத சரக்கு கப்பலில் பசிபிக் மாக்கடலில் 40 நாள் பயணம். சூறைக்காற்று,கடல் கொந்தளிப்பு, உணவு பற்றாக்குறை, முதலுதவி மருந்து மாத்திரைகள் கூட இல்லாத சூழல், அவ்வப்போது செயலிழக்கும் கப்பலின் எஞ்சின், எமர்ஜென்சிக்கு இருப்பில் இல்லாத ஆக்சிஜன் அங்கிகள் என்று எந்த சாதகங்களும் அற்ற பிரயாணத்தில், இன்னும் ஒரு நாள் கூடுதலாக வாழ்ந்து விட முடியாதா என்ற மனித ஏக்கத்தின் நெடும் மூச்சுதான் சூரியரேகை. யூதப்படுகொலைகளைக் குறித்து இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஐரோப்பாவில் எடுக்கப்பட்டுவிட்டன. உலகின் பார தூரங்களில் அகதிகளாகத் தூக்கி எறியப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் பாடுகளும் உயிரைப் பயணம் வைத்து அவர்கள் மேற்கொண்ட சாகசப்பயணங்களும் திரைப்படங்களாக உருவாக்கப்படவில்லை. இந்திய-பிரஞ்சு-ஜெர்மானிய-கனடிய சர்வதேச இணைத்தயாரிப்பாக உருவாகிக் கொண்டிருக்கும் சூரியரேகை தமிழில் ஒரு முன்னோடி முயற்சி. இப்படம் சாத்தியமாகும் காலக்கட்டம் – கோடம்பாக்க சந்தைக்கு விலை போகாமல் இண்டிபெண்டென்ட் சினிமாவுக்கான கங்குகளை ஊதி ஊதி தங்கள் கார்காலத்திற்காக காத்திருக்கும் படைப்பாளர்களுக்கு சர்வதேச வாசல்களைத் திறந்து விடும் என்று உறுதியாக நம்புகிறேன்.
லீனா மணிமேகலை
படைப்பும் தடையும்
25/04/2017
லீனா மணிமேகலை, அந்திமழை
ஆங்கிலேயர் காலத்தில் இருந்த தணிக்கை முறைகளின் நீட்சி தான் சுதந்தர இந்தியாவில் சென்சார்போர்டு என்ற வடிவில் தொடர்ந்தது. எண்பதுகளின் பிற்பகுதியில்தான் சென்சார் போர்டு எதையும் தணிக்கை செய்யக்கூடாது, படங்களில் எந்த வெட்டும் கொடுக்கக்கூடாது என்று விதிமுறையில் மாற்றம் செய்தார்கள். அது வெறும் சான்றிதழ் மட்டுமே தரக்கூடிய அமைப்பாக மாற்றப்பட்டது. சட்டப்படி கலைஞர்களுக்கு கருத்துரிமை வழங்கப்படுகிறது. அத்துடன் பார்வையாளர்களுக்கு தணிக்கை இன்றி படங்கள் பார்க்கும் உரிமையும் பாதுகாக்கப்படவேண்டும். அதனால்தான் இப்போது சென்ஸார் போர்டை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் எல்லா இயக்குநர்களுமே வெற்றிபெறமுடிகிறது. அரசியல்சாசனத்தின் 19 ஆம் சட்டப்பிரிவு இதற்கு வழிவகுக்கிறது. ஆனால் என்ன நடக்கிறது? ஆட்சிகள் மாறும்போது பிராந்திய சென்சார் போர்டுகளில் அரசியல்ரீதியில் நியமனங்கள் நடைபெறுகின்றன. இவர்களுக்கும் சினிமாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மத்திய சென்சார்போர்ட் தலைவர் பங்கஜ் நிஹ்லானி நேரடியாக மோடியின் கையாள் என்று தன்னைச் சொல்லிக்கொண்டார். அனைவருமே தங்கள் அரசியல் மாஸ்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக செயல்படுகிறார்கள். இதில் யாருமே படைப்பாளியைப் புரிந்துகொண்டவர்கள் கிடையாது. இது ஏன் பூதாகரமாக வெடிக்கவில்லை என்றால் நமது திரைப்பட உலகம் வணிகப் படங்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் வெளியீட்டுக்கு நேரம் குறித்துவிட்டு தணிக்கைச் சான்றிதழ் பெறச் செல்லும்போது, பல இடங்களில் வெட்டச் சொல்கிறார்கள். இதில் ஊழல், பேரங்கள் நடைபெறுகின்றன. வணிகப்படம் எடுத்தவர்கள் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதையே பெரிய சாதனையாக எண்ணி விளம்பரங்கள் கொடுப்பதையும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இந்தமாதிரி போக்கு இருக்கும் ஆட்கள்தான் சினிமாவில் இருக்கிறார்கள். அறுபது வெட்டுகள் கொடுப்பதும் கொஞ்ச காசு உள்ளே போனதும் அது நாற்பதாகக் குறைவதும் நடக்கிறது. இல்லையெனில் கபாலி போன்ற படத்துக்கு யு சான்றிதழ் வாங்க முடியுமா? அமெரிக்காவிலேயே அது யு/ஏ தான்.
இந்த சமயத்தில் சந்தைக்காக படம் எடுக்காத, சுதந்தரமான திரைக்கலைஞர்களும் இதே சென்சார் போர்டைத்தான் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. என்னுடைய எல்லா படங்களுமே பிரச்னையைத்தான் எதிர்கொண்டன. சண்டை போட்டுத்தான் சான்றிதழ் பெறவேண்டி இருக்கிறது. செங்கடல், இப்போது எடுத்த ஈஸ் இட் டூமச் டு ஆஸ்க் வரைக்கும் பிரச்னைதான். இந்த படத்தில் திருநங்கைதான் பாத்திரங்கள். சென்சார் ஆட்கள் இது அவனா அவளா என்றே தெரியவில்லை. இதை எப்படி குழந்தைகள் பார்க்க முடியும் என்று கேட்டார்கள். அவ்வளவுதான் அவர்களின் புரிதல். தரமான பாலின புரிந்துணர்வு அவர்களுக்கு இருந்திருக்குமேயானால் இன்றைக்கு ஒரு படமும் கூட வெளிவந்திருக்காது. கிட்டத்தட்ட எல்லா படமுமே பெண்களை இழிவு படுத்துவதாகத்தானே இருக்கின்றன?
எந்த சென்ஸிடிவிட்டியும் இல்லாத ஆட்களிடம் தான் நாம் முட்டிமோத வேண்டியிருக்கிறது. நான் முதல்முதலில் என்னுடைய பறை படத்தை சென்ஸாருக்கு எடுத்துச் சென்றேன். இதற்கு முன்னால் நான் எந்த சான்றிதழும் வாங்கியது கிடையாது. ஏன் போனேன் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
முன்பெல்லாம் திரைப்பட விழாக்கள், பிலிம் சொசைட்டிகளில் படம் திரையிடலுக்கு எந்த சென்சாரும் வேண்டியதில்லை. ஆனால் பாஜக முதல்முதலில் ஆட்சிக்கு வந்த காலத்தில் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளும் படங்களுக்கு சென்ஸார் தேவை என்று அறிமுகப்படுத்தப்பட்டது. திரைப்படவிழாக்கள் என்பவை படைப்பு சுதந்தரத்துக்கானவை. அங்கும் தணிக்கையா என்று 300க்கும் மேற்பட்ட சுதந்தர படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து இந்த விதிக்கு எதிராகப் போராடி, இந்த விதியை எடுக்க வைத்தார்கள். ஆனால் இன்றும் தணிக்கைச் சான்றிதழ் இல்லாவிட்டால் இந்தியன் பனோரமாவுக்கு, தேசிய விருதுக்குப் படம் அனுப்ப முடியாது. இந்தியன் பனோரமாவில் தேர்வானால் தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்படும். அவற்றை அரசுத் தொலைக்காட்சி வாங்கிக்கொள்ளும். இதெல்லாம் திரைப்படக் கலைஞர்களுக்கு பொருளாதார ரீதியில் மிக முக்கியமான அம்சங்கள். ஒரு கட்டம் வரை இந்தியன் பனோரமா தான் தேர்வான படங்களை வெளிநாடுகளில் நடக்கும் விழாக்களுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. இயக்குநர்களே நேரடியாக அனுப்பிக்கொள்ளலாம். இணைய வசதி அவ்வளவு மாற்றங்களை உருவாக்கி உள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன் செங்கடல் எடுத்தபோதுமே கூட நான் கொரியர்தான் அனுப்பிக்கொண்டிருந்தேன். இப்போது இணையம் மூலம் அனுப்பினால் போதும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் பனோராமா மிக முக்கியமானதாக இருந்தது. அதற்கும் படம் அனுப்ப சான்றிதழ் கேட்டார்கள். அதாவது சுதந்தரமான படைப்பாளியாக இயங்கமுடியாமல் இப்படி கட்டுப்பாடுகள் விதித்து வைத்திருந்தார்கள். அப்புறம் இன்றுவரை 35 எம் எம் பிரிண்டை வெளிநாட்டுக்கு அனுப்பவேண்டும் என்றால் சென்ஸார் சான்றிதழ் இல்லாமல் அனுப்பமுடியாது என்ற அபத்தமான விதி உள்ளது. ஆனால் இப்போது இணையம் மூலமாக முழுப்படத்தையும் வெளியே அனுப்பலாம். இந்த சான்றிதழ்கள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நமது நாட்டுக்குள் உங்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்றால் உங்களுக்கு சான்றிதழ் முக்கியம்.
இதுவரைக்கும் தேசிய விருதுக்கு என்னுடைய ஒரு படத்தையும் அனுப்பவில்லை. என்னுடைய Goddesses படம் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் தங்கப்பதக்கம் வாங்கியது. அதைக்கூட நான் அனுப்பவில்லை. ஏனெனில் சான்றிதழ் வாங்கவேண்டும். செங்கடலுக்கு வாங்கியும் கூட அந்த சான்றிதழ் தயாரிப்பாளர் பெயரில் வாங்கினோம். தயாரிப்பாளர் அதை அனுப்பவே இல்லை!
மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் சான்றிதழ் தேவையில்லை என்று போராடி வெற்றி பெற்றதால் அதற்கு அனுப்ப முடிந்தது.
படம் சென்ஸார் போர்டுக்குப் போனால் அதில் பல வெட்டுகள் கொடுப்பார்கள். அதைச் செய்யமுடியாது என்றால் மறுபரிசீலனை. அதற்கு நாம்தான் பணம் கட்டவேண்டும். இவர்களின் கோமாளித்தனத்துக்கு நாம் செலவழிக்கவேண்டும். இங்கிருந்து மத்திய டிரிபியூனல் போகலாம். அங்கே வழக்கறிஞருக்கு நாம்தான் பணம் கொடுத்து வாதாடவேண்டும். ஆனந்த பட்வர்த்தன் பொன்றவர்கள் இப்படித்தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ட்ரிபியூனலில் ஜெயிக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் போய் வாதாடவேண்டும். செங்கடல் படத்துக்கு முதலில் இங்கே தடை கொடுத்துவிட்டார்கள். எங்கேயும் திரையிட முடியாது. நான் இங்கே மறுபரிசீலனைக் குழுவுக்கெல்லாம் போகவில்லை. அதற்கே 25000 ரூபாய் செலவாகிறமாதிரி இருந்தது. எனவே நேரடியாக ட்ரிபியூனலுக்கே சென்று வழக்காடினோம். ட்ரிபியூனலில் சென்ஸார் போர்டுக்கு டைரக்ஷன் கொடுத்தார்கள். இதை எடுத்துக்கொண்டு திரும்ப சென்னைக்கு வந்து, டிரைபியூனல் கொடுத்த விதிகள் படி அமைக்கப்படும் சிறப்புக் குழுவுக்கு போட்டுக் காண்பித்துதான் சான்றிதழ் வாங்க முடியும். இது பெரிய வேலை. அப்படித்தான் செங்கடலுக்கு வாங்க முடிந்தது.
இப்போதைக்கு நாங்கள் சொல்வது என்னவென்றால் சென்ஸார் போர்ட் என்பது குப்பையில் தூக்கிப்போடவேண்டிய அமைப்பு என்பதுதான். சுதந்தரமான ஓர் அமைப்பு, அரசால் கட்டுப்படுத்தமுடியாத ஓர் அமைப்பு சான்றிதழ் கொடுக்கலாம். இந்த சான்றிதழ் விவகாரத்திலும் ஒரு சிக்கல் உள்ளது. செங்கடலுக்கு ஏ கொடுத்தார்கள். ஏனெனில் அந்த படத்தில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற வாழும் தலைவர்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன என்று காரணம் சொன்னார்கள். நான் இதையும் எதிர்க்கலாம். அதற்கெல்லாம் எனக்கு சக்தி இல்லை என்பதால் விட்டுவிட்டேன்.ஏன் இந்த சான்றிதழ் முக்கியம் என்றால் ஏ சான்றிதழ் இருக்கும் படங்களை பனோரமாவுக்கு தேர்வானாலும் தூர்தர்ஷனில் வாங்க மாட்டார்கள். தூர்தர்ஷன் கொடுக்கும் பணம், அதற்கு இருக்கும் பார்வையாளர் எண்ணிக்கை ஒரு கலைஞருக்கு மிக முக்கியம்.
முதல் உலக நாடுகளில் இங்கிருப்பது போல் சென்ஸார் இல்லை. ஒரு சுதந்தரமான கலைஞனின் படத்தில் கடுமையான சொற்பிரயோகம் இருக்குமெனில் அதை வெட்ட மாட்டார்கள். இதில் இப்படி இருக்கிறது என்று டிஸ்கிளைமர் போடுவார்கள். அவ்வளவுதான். ஒரு படைப்பாளி தன் படத்தில் வெட்டுவிழுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீங்கள் ஒரு நாவல் எழுதுகிறீர்கள். பதிப்பாளர் அதை வெட்டிவிட்டுத்தான் பதிப்பிப்பேன் என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதேதான். ஆனால் இந்த தார்மீகக் கோபமே இங்கிருக்கும் படைப்பாளிகளுக்கு இல்லையே..
Lipstick Under My Burkha என்று ஒரு படத்துக்கு தடை கொடுத்தபோது நீதிபதி, ‘ ஏன் இப்படி நடந்துகிறீங்க.. உங்கள் வேலை ஏ வா யு வான்னு சான்றிதழ் கொடுக்கிறதுதானே.. ஏன் இப்படி தலைவலி கொடுக்கிறீங்கன்னு’’ வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்.
இதுவரை நாம் பேசியது சட்டத்துக்கு உட்பட்ட தணிக்கை. இதை எதிர்த்துப்போராட நமக்கு வழிகள் உள்ளன. நம் உரிமைகளுக்கு சட்டப்பாதுகாப்பு இருக்கிறது. உச்சநீதிமன்றம் வரை போகலாம்.ஆனால் இதற்கு வெளியே கும்பல் தலையிட்டுச் செய்யும் தணிக்கை என்று ஒன்று இருக்கிறது. இதில் யாரையும் எதிர்த்துப் போராட முடியாது. யாரை எதிர்க்கிறோம் என்றே தெரியாமல் போராடவேண்டியிருக்கிறது. இடதுசாரி அமைப்புகளும் அப்படித்தான். ஸ்டாலினியவாதிகளாக இருப்பதால் இவர்களுக்கும் புரிவதில்லை. தணிக்கை என்பது ஓர் அச்சுறுத்தல் அதை எதிர்க்கவேண்டும் என்று இவர்கள் நினைப்பதில்லை.
யாராக இருந்தாலும் உதாரணத்துக்கு ஜோ டி குரூஸ் நூலுக்கும் ஆதரவாக இருக்கவேண்டும். பெருமாள் முருகன் நூலுக்கும் ஆதரவாக நிற்கவேண்டும். ஆனால் தன்னுடைய கொள்கைக்கு ஆதரவாக இல்லாதவர்களைக் கைவிட்டுவிடும் போக்குதான் நிலவுகிறது. இடதுசாரி எழுத்தாளர்களுக்கு மிகவலிமையாக ஆதரவு தெரிவிக்கும் இயக்கங்கள், வலதுசாரி எழுத்தாளனை அம்போவென விட்டுவிடுவார்கள். அவனது படைப்புரிமைக்கும் குரல் கொடுக்கவேண்டும். அதுதான் உண்மையான படைப்புச் சுதந்தரம். தமிழ் தேசிய, ஈழ ஆதரவாளர்களிடமும் இதே கருத்துரிமை எதிர்ப்பு மனநிலைதான் உள்ளது.
விஸ்வரூபம் படத்தில் உங்களுக்குப் பிரச்னை என்றால் அதை விமர்சனத்தின் மூலம் அணுகுங்கள். டேம் 999 படத்தில் பிரச்னை என்றாலும் அப்படித்தான் அணுகவேண்டும்.
படைப்பாளிகளுக்கு அரசு தடை விதித்தால் சட்டப்பாதுகாப்பு பெறலாம். போராடலாம். ஒரு இயக்கம் அந்தப் படத்தைப் போடக்கூடாது என்றால் தியேட்டர்களில் போடமாட்டார்கள். இதையாரும் எதிர்கொள்ள முடியாது. வித் யூ வித்தவுட் யூ சிங்களப் படம் வந்தபோது, சிங்கள முன்னாள் ராணுவவீரன் தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்வதாக எப்படி படம் எடுக்கலாம் என்று இரண்டு திரை இயக்குநர்கள் சீமானும் வ. கௌதமனும்தான் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்த படத்தை திரையிட அனுமதிக்கவில்லை.
என்னுடைய ‘ஒயிட் வேன் ஸ்டோரீஸ்’ படத்துக்கும் இதேதான் நிலை. போலியான பெயரில் அதற்கு எதிராக அறிக்கை வெளியிட வைத்தார்கள். வதந்திகளைப் பரப்பினார்கள். உங்களுக்கு உகந்த கருத்துகளைச் சொல்லவில்லையென்றால் அந்த படைப்பாளியைக் காலி செய்துவிடுவார்கள். அந்த படத்தை ஏழு முறை திரையிடவிடாமல் தடுத்தார்கள். நான் வெறுத்துப்போய்விட்டேன். தமிழ் தேசியம் பேசுகிறவர்கள், முற்போக்கு இயக்கங்கள் எல்லோருக்குள்ளும் தணிக்கைவாதிகள் இருக்கின்றனர். அதைக் களையாமல் இங்கு வீரியமான படங்கள் வரவே முடியாது. இன்றுவரை யூதர்கள் படுகொலை பற்றி படங்களில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் லட்சக்கணக்கான தமிழர்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். கடைசிப்போரில் லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த துயரம் பற்றி எத்தனைப் படங்கள் வந்திருக்கவேண்டும்? ஆனால் என்ன வந்திருக்கிறது? ஒரு வீரியமான படைப்புமே இல்லை. எதுவுமே வரவில்லை. இதற்கான மொத்த பாராட்டுமே தமிழ்த் தேசியவாதிகளையே சாரும். இவர்களின் ‘கும்பல்’ நாயகமே காரணம்!இவர்கள் இந்தப் படங்களைப் பார்க்கவே மாட்டார்கள். பார்க்காமலேயே எதிர்ப்பார்கள். அப்படியே கும்பலாகச் செயல்பட்டு அந்த படங்களை திரையிடவிடாமல், அதைப் பற்றி எழுதவிடாமல் தடுத்து சத்தமே இல்லாமல் அழித்துவிடுவார்கள்.! எப்போதுமே ஒரு படைப்பாளி பாதுகாப்பு மனநிலையிலேயே இருக்கவேண்டும் என்று ஒரு சமூகம் வைத்திருக்கிறது என்றால் அது என்ன சமூகம்? வானத்திலிருந்து எந்த படைப்பாளியும் குதிக்க முடியாது. இந்த சமூகத்திலிருந்துதான் வர முடியும்.
https://youtu.be/aeDjbLOrP6M?si=DDQGjuoBOjWM1slK
சுதந்தரமான படைப்பாளிகளைப் பாதுகாப்பதும் சமூகத்தின் பொறுப்பும்தான். அப்படி ஒவ்வொரு படைப்பாளியுடனும் கொள்கை சார்பு பார்க்காமல் நிற்கவேண்டும். இதுவே படைப்பியக்கத்துக்கு முக்கியமானது.
கமலா தாஸ் வாழ்க்கை திரைப்படமாகிறது – ஜன்னல் நேர்காணல்
பிரபல மலையாளக்கவிஞர் கமலா தாஸின் கதையை,படமாக எடுக்கும் எண்
கமலா தாஸ் என்னை மிகவும் பாதித்த கவிஞர். என் ஆதர்சம். அவருடைய Summer in Calcutta என் கைப்பையில் எப்போதும் வைத்திருப்பேன். “என் கதை” என்ற அவரது சுயசரிதை நூல் சந்திக்காத சர்ச்சைகளே இல்லை. எழுபதுகளில் அவர் எழுத துணிந்த விசயங்கள் இன்று எழுதிக் கொண்டிருக்கும் பெண்கள் கூட எழுத தயங்குபவை. அவரைப்போல துணிச்சலாக தன் ஆன்மாவை எழுத்தில் பதித்த எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
கனடிய எழுத்தாளர் “மெரிலி வீஸ்பர்க்” கமலா தாஸின் இறுதி நாட்களில் அவரோடு இருந்து எழுதிய “Love Queen of Malabar” என்ற புத்தகம் படித்தபோது அவருடைய வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கலாம் என்று பொறி தட்டியது. முரண்பாடுகளின் குவியலாய், ஒரு கவி மனதின் அத்தனை அலைக்கழிப்புகளும் கூடியதாய் அவருடைய வாழ்வு, அன்புக்கு ஏங்கி தவிக்கும் அவரின் ஆன்மா என கமலா தாஸ் அழியாத சித்திரமாக பதியப்பட வேண்டியவர். என் படம் அதை நிறைவேற்றும்.
ஏன் கமலா தாஸ் பற்றிய கதை இப்
கமலா தாஸின் தேவை எக்காலத்துக்கும் இருந்துக்கொண்டே தான் இருக்கும் என்பது என் கணிப்பு. வாழ நினைக்கும் வாழ்வு ஒன்றாகவும், சமூகம் நிர்ப்பந்திக்கும் வாழ்வு ஒன்றாகவும் இருக்க சற்று சுதந்திரமாக மூச்சுவிடுவதற்காக எழுத்தை நாடும் ஒவ்வொரு பெண்ணிலும் கமலா தாஸ் ஆழமான ரேகைளாக பதிந்திருக்கிறார். அப்படி அவர் என்னுள் பதிந்திருக்கும் ரேகைகளில் ஒளியையும் ஒலியையும் பாய்ச்சிப் பார்க்க போகிறேன்.
கமலா தாஸை பலரும் விமர்சிக்க,
ஒரு ஆண் தன் உறவுகளைக் குறித்து எழுதும்போது அந்தப் பிரதி பொதுப்பிரதியாக பார்க்கப்படுகிறது. அதுவே ஒரு பெண் எழுதும்போது அவரின் தனிப்பிரதியாக பார்க்கப்படுகிறது. பெண் எழுத்தின் மீதான சாவித்துளை பார்வைகளும், ஒழுக்கம் குறித்தான தீர்ப்புகளும் சதா அவரை சர்ச்சைக் குள்ளாக்கின. அவரை பல பெயர்களிட்டு அழைத்தன. சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகளுக்கும் போலித்தனங்களுக்கும் அவரின் எழுத்து அச்சுறுத்தலாக இருந்தது. அதனாலேயே சமூகம் அவரைப் பல வகையில் தண்டித்தது. அவருடைய வாழ்வும் எழுத்தும் அதற்கு அவர் சந்தித்த எதிர்ப்புகளும் அவரைப் பிரதிபலித்தது என்பதை விட அவர் வாழ்ந்த சமூகத்தையும் காலத்தையும் தான் மிகத் துல்லியமாக பிரதிபலித்தது என்பேன்
தமிழில் கமலா தாஸ் பெரிய அளவி
ஜெயமோகனிடம் இதைக்குறித்து நேரிடையாகவே விவாதித்திருக்கறேன். அவர் பெண் எழுத்தை, எழுத்தாளர்களை மஞ்சக்காமாலை கண்களுடன் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கமலா தாஸைப் பற்றி சக்கரியா எழுதியிருப்பதைப் படியுங்கள். என்.எஸ். மாதவன் எழுதியிருப்பதைப் படியுங்கள். ஜெயமோகன் எழுதும் தீர்ப்புகளை விட அவர் எழுதும் புனைவுகளைப் பொருட்படுத்த விரும்புகிறேன்.
தமிழில் என்ன மாதிரியான தாக்
நான் தமிழ் மார்க்கெட்டுக்காகவோ, மலையாள மார்க்கெட்டுக்காகவோ படங்கள் செய்வதில்லை. நான் இதுவரை செய்துவரும் இன்டபென்டண்ட் சினிமா மொழியில் தான் கமலாதாஸ் செதுக்கப்படுவார்.
கமலா தாஸ் படம் தேவையில்லாத ம
சினிமா கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை எந்த சினிமாவாலும் மதக்கலவரங்கள் ஏற்பட்டதாக சரித்திரம் இல்லை.
படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த வித்யாபாலன் மற்றும் மஞ்
தன் திறமை மேல் நம்பிக்கையுள்ள கலைஞர்கள், அரசியல் சில்லுண்டிகள் – தங்களை, தங்கள் முடிவுகளை தீர்மானிக்க அனுமதிக்க மாட்டார்கள்.
பிரபலங்கள் யாரும் கமலாதாஸ்
கமலாதாஸாக நான் நடிப்பதாக இருக்கும் ஏற்பாட்டில் மாற்றம் இல்லை. “என் கதை” எழுதும் போது முப்பதுகளில் இருந்த கமலா தாஸின் பாத்திரத்தை நான் ஏற்று நடிக்கிறேன். சிறுமி கமலாதாஸ் மற்றும் பதின்பருவ கமலா தாஸ் கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு நடந்துக்கொண்டிருக்கிறது.
மலையாள இயக்குனர் கமல் பார்
கமல் அப்படி சொல்லித்தான் என் முயற்சிகளை மூன்று வருடங்களாக நிறுத்திவைத்திருந்தார். கமர்சியல் இயக்குநர்களிடம் நேர்மையை எதிர்பார்த்தது என் முட்டாள்தனம் தான். வியாபார நிர்ப்பந்தங்களுக்கு முன் கவிஞரின் ஆன்மா எப்போதும் செல்லாக்காசு தான்.
கமல் போன்ற பெரிய கமர்சியல்
கமலா தாஸை சந்தைக்கு ஏற்றவாறு பினாயில் போட்டுக் கழுவிக் கொடுப்பாராயிருக்கும். அது அவர் பாடு.
கமர்சியல் படமாக எடுக்கத் தி
என்ன மாதிரியான கேள்வி இது? எனக்குத் தெரிந்த சினிமாவாக எடுப்பேன்.
படம் தொடர்பான அடுத்த கட்ட
ஸ்கிரிப்டை இன்னும் ஆழமாக உழுதுக் கொண்டிருக்கிறேன். அதற்குப்பின் Indo Canadian Co-Production – ஆக படம் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும். கேரளா, மும்பை, கொல்கத்தா, பூனா மற்றும் கனடாவில் படப்பிடிப்பு நடைபெறும். 2018 -ல் படம் களம் காணும்.
20/04/2017
These women unveil their telling tales
APRIL 12, 2017 00:52 IST
UPDATED: APRIL 12, 2017 00:52 IST
Docu traces struggles of five women
“She has her entire life ahead of her but chose to break the anonymity to tell her story,” says film-maker Leena Manimekalai about why she chose a Malayali student as one of the protagonists of her documentary on rape.
She was speaking to The Hindu on the sidelines of the shoot of her documentary Rape Nation: I Will Not Keep Quiet here on Tuesday.
“It is phenomenal that someone as young as 24 years is dispassionate about her past and is willing to reveal all, and wants to have a successful career and give back to the community by working with children who have been abused,” says Leena. The director who is on the last leg of the shoot says the documentary traces the struggles of five women – Soni Sori, Bilkis Bano, Bhanwari Devi, Manorama, and the 24-year-old student from Kerala. “She will be the youngest survivor [in the documentary]. The backgrounds are different but the struggles of the survivors are the same – overcoming the past, becoming fighters, and giving back to the community.”
Leena says she zeroed in on these women because “they are not defined by the tragedy.” The women also showed courage in shedding the cloak of anonymity. “It is not the survivor who has to be ashamed, but the perpetrator.”
People, she says, tend to fall into patriarchal traps of how their daughters won’t be able to show their face in society or won’t find an eligible groom if things get out.
The Malayali student, she says, wanted to publish her autobiography.
Rampant in families
Leena stresses the need to get out of denial mode, and accept that sexual abuse is rampant in families. “Rape within families is an elephant sitting in front of us and we can’t pretend it is not there by trumpeting about Indian society that gives importance to family,” rues Leena. De-stigmatising rape and shifting the discourse to men will make a difference, she says. “Change has to come from everywhere. It cannot be unidimensional.” The place to start with is homes. “If a girl and boy are treated equal and mothers start working towards homes without gender bias, there will be some change. This is also true for workplace, and the State. Everything has to come together.”
My Documentary “Is it too much to ask” – Inside Lens, NHK, Japan
Check out for the first look of my latest film Is it too much to ask with all the information, trailer and my interview
Link!
http://www3.nhk.or.jp/nhkworld/en/tv/lens/