
Independent Film Festival of Chennai – IFFC
சென்ற வருடம் ஒரு நாள் நிகழ்வாக தன் பயணத்தை தொடங்கிய சென்னை சுயாதீன திரைப்பட விழா, இந்த வருடம் மூன்று நாட்கள், திரையிடல்-விவாதங்கள்-மாஸ்டர் க்ளாஸ்- படக்குழுவினர் சந்திப்பு என சுமார் ஐம்பது மணி நேர நிகழ்ச்சி நிரல், இந்தியாவின் பிற மாநிலங்கள், இலங்கை, பங்க்ளாதேஷ் என பல பிரதேசங்களிலிருந்து வருகை தரும் இருபத்தியைந்துக்கும் மேற்பட்ட இயக்குனர்கள், திரைக்கலைஞர்கள் வருகை, திரைப்பட சந்தை என்று மிகுந்த ஆற்றலுடன் வளர்ந்து நிற்கிறது. அருணின் தலைமையில் ஒரு தேர்ந்த இளைஞர் படையின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இதை சாத்தியமாக்கி யுள்ளது. பண்பாட்டுத் தளத்தில் தமிழ் ஸ்டுடியோ ஒரு பாய்ச்சலை ஏற்படுத்திக்கொண்டிருப்பதை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இந்த வருடம் திரைப்படங்களின் நிரலை ஒழுங்குப்படுத்தும் வாய்ப்பை பயன்படுத்தி என் சிறிய பங்கை ஆற்றியிருக்கிறேன். உங்கள் பேராதரவை தர வேண்டும். அன்பாலும் கலையாலும் இணைவோம். நன்றி.





