
மொழி எனது எதிரி
லீனாமணிகேலை, கவிஞராகவும் திரைப்பட இயக்குநராகவும் மற்றும் சமூக செயல்பாட்டாளரகவும் ஒருசேர அறியப்பட்டவர். தனது எழுத்துப் பரப்பில் பன்முக படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருபவர். இவரது பிரதிகளான கவிதைகள் /ஆவணப்படங்கள் / பெண்ணிய சொல்லாடல்களை உள்ளடக்கி இருப்பவை. இவை ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவையாக இவரிடம் இயங்குகிறதா? அல்லது இவைகளுக்கிடையில் இடைவெளிகள் நிலவுகின்றனவா? குறிப்பாக கவிதைகளின் எழுத்துத் தொழில்நுட்பமும் மற்றும் கவித்துவக் கருதோள்களும் யாவை என்ற வினாக்களை முன்வைத்து நிகழத்தப்பட்ட நீண்ட உரையாடலின் பிரதி வடிவமே ”மொழி என் எதிரி ” என்ற நேர்காணல் புத்தகம். புனைகதையாசிரியர் பாலசுப்பிரமணியம் பொன்ராஜ் அவர்களும் நானும் இணைந்து; லீனாமணிமேகலையின் நெடிய உரையாடலை பதிவு செய்தோம்.
இந்நூல் லீனா அவர்களின் பிரக்ஞைப் பூர்வமான கவிதைகளில் பொதிந்திருக்கும் அழகியல் பின்னணி முழுத் தெளிவுடன் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சமூக செயல்பாட்டாளாராக இவர் இயம்பிய கருத்தாக்களை இவரே இன்று மீளாய்வு செய்யும் இடங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, மனித மையத்தை வலியுறுத்தும் சமூகக் கருத்தாக்கங்களில் உறுதிப்பாடு உடையவராக இருந்தபோதிலும்; லீனாமணிமேகலை அவர்கள், கவிதைப் பிரதிகளின் கட்டமைபைப் பற்றி எழுப்பட்ட வினாக்களுக்கு அமனித மைய பார்வையிலிருந்து அளித்துள்ள விளக்கங்கள் சுவராசியமானவை.. இவர்து படைப்பாக்கங்கள் கோரும் மாற்று- வாசிப்பை எந்த புள்ளியிலிருந்து துவங்கலாம் என்பதற்கான திறவுகோல்கள் நேர்காணலில் காணக் கிடைக்கிறது எத்தகைய கடுமையான வினாக்களுக்கும் ஆற்றொழுக்காக ஒளிவு மறைவின்றி பதிலளித்த விதத்தை இங்கு குறிப்பிட வேண்டும். இந்நேர்காணல் லினாமணிமேகலை அவர்களின் படைப்புகளின் முழுப்பரிமாணத்தையும் வெளிப்படுத்துக் கூடியதாக அமைந்திருக்கிறது.
எஸ். சண்முகம்
மார்ச் 2018
பதிப்பகம் கலைஞன் பதிப்பகம்
விலை 110