ஆகஸ்ட் தடம் இதழில் எனது புதிய கவிதைகள் துருக்கி ராஜா ஒரே ஒரு கவிதையை அவற்றில் இருந்து இங்கே பிரசுரிக்கிறேன். மற்றதை, தடம் இதழ் வாங்கி வாசிக்கவும் “ஓரு இலை விடாமல் பூத்து என்னை சரக்கொன்றையாய் ஆக்கியவன் நாளங்கள் எங்கும் மஞ்சள் நதியெனப் பெய்துக் கொண்டிருக்கிறான் அதன் நுரைத்தக் கரைகளில் பதுமைகளென சமைந்திருந்த ஏக்கங்களின் ஊற்றுக் கண்கள் ஒவ்வொன்றாய் திறக்க வாசலற்ற கோயிலென உடலின் மணிகள் விடாமல் அடிக்கத் தொடங்கின”