
கருத்து சுதந்திரம் – தமிழ் பத்திரிகை சூழல் ( புதிய தலைமுறை ஆசிரி உரையாடல்)
from
kalyan kumar kalyangii@gmail.com
to
Leenamanimekalai@gmail.com
date
23 March 2012 14:53
subject
உங்கள் கருத்து
mailed-by
gmail.com
Signed by
gmail.com
Important mainly because of the people in the conversation.hide details 23 Mar (3 days ago)
வணக்கம் லீனா,
போனில் தொடர்பு கொண்டேன். கிடைக்கவில்லை. லண்டனில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
’இனியாவது திருந்துமா இலங்கை’ என்ற தலைப்பில் இந்த வாரம் கவர் ஸ்டோரி எங்களின் புதிய தலைமுறை வார இதழில் தயார் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு படைப்பாளியின் பார்வையில் உங்கள் கருத்து என்ன? அந்த நாட்டுக்கு எதிரான தீர்மானம் எந்த வகையில் பலன் அளிக்கும்? என்ன மாற்றங்கள் வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி.
அன்புடன்
கல்யாண்
புதிய தலைமுறை
9500061604
from leena manimekalai leenamanimekalai@gmail.comtokalyan kumar <kalyangii@gmail.com> </kalyangii@gmail.com> date 23 March 2012 20:58 subject Notes – Puthiya Thalaimurai mailed-by gmail.com |
hide details 23 Mar (3 days ago) |
Vanakkam. Below is my note. Please mail me and get it approved, if you make any corrections. This is a political opinion on a very sensitive issue and I dont want the note to be changed without my consent. thanks. Leena Manimekalai
இனியாவது திருந்துமா இலங்கை என்பதை எனறாவது திருந்துமா இந்தியா என்று மாற்றி கேட்க வேண்டும் நீங்கள்.
இலங்கை குறித்த பிரேரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்காதிருந்தால் கூட அந்தப் பிரேரணை 8 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கும். இலங்கையின் உற்ற நண்பனும் யுத்தப் பங்காளியுமான இந்தியா ஏன் பிரேரணைக்கு ஆதரவான நிலையை எடுத்தது என நாம் சிந்திப்பது அவசியம்.
ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் முதல் நாள் (மார்ச் 7ஆம் திகதி) வைத்த தீர்மான அறிக்கை இறுதி நாள் வாக்கெடுப்பின் போது இரண்டு மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்ததது. இந்த இரண்டு மாற்றங்களும் இந்தியாவின் ஆலோசனையின் பேரிலேயே கொண்டுவரப்ப்பட்டுள்ளன என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மார்ச் 7 தீர்மானத்தின் 3-வது பிரிவில், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில் நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
இந்த 3 வது பிரிவையே இலங்கை மிக அபாயகரமானதாகக் கருதியது. இத்தீர்மானம் இலங்கை இறையாண்மையின் மீதான அமெரிக்காவின் அச்சுறுத்தலாக இலங்கை அரசு கொதித்தது. அப்போதெல்லாம் பிரேரணைக்கு எதிராகவே இந்தியா வாக்களிக்குமென நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி தெரிவித்ததும் அதைத் தொடர்ந்து தமிழக எம். பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் நிகழ்ந்தன.
இலங்கையை காப்பாற்ற இந்திய அரசு எடுத்த முடிவுதான் அந்தத் திருத்தங்கள். திருத்தங்கள் செய்யப்பட்டதால் தான் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு செய்தது. எனவே இலங்கையை அச்சுறுத்தக் கூடிய 3 வது பிரிவை “இலங்கை அரசுடன் ஆலோசனை நடத்தி அதன் ஒப்புதலைப் பெற்று நிறை வேற்றவேண்டும்” என்று இந்தியா திருத்தம் செய்துள்ளது. இதன் முலம் ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் வழிகாட்டலை ஏற்றுக்கொள்ளும் நிர்பந்தத்திலிருந்து இலங்கை தப்பித்துக்கொண்டது.
அதுமட்டுமல்லாமல் “விசாரணைத் தொடர்பாகவும், தமிழ் மக்களுக்கு செய்யப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் ஆராய வரும் ஐ.நா. குழுவினர் இலங்கை அரசின் ஒப்புதலைப் பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்றும் ” புதிய அம்சம் தீர்மானத்தில் புகுத்தப்பட்டு இலங்கை இந்தியாவால் காப்பாற்றப்பட்டுள்ளது என்றே கருதவேண்டியுள்ளது.
கூடவே, தீர்மானத்தின் மூலம் இலங்கையை அச்சுறுத்தல் செய்த அமெரிக்கா தீர்மானம் நிறைவேறிய சூட்டோடு சூடாக
இலங்கைக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை தளர்த்தி, வான் வழி மற்றும் கடல் வழி கண்காணிப்புக்கான கருவிகளின் ஏற்றுமதியை அனுமதித்துள்ளதாக தெரிவித்திருப்பது ஒன்றும் தற்செயலானதல்ல.
லீனா மணிமேகலை
2012/3/24 kalyan kumar <kalyangii@gmail.com>
Dear sir,
கவர் ஸ்டோரி குறித்த தனது கருத்தை லீனா மணிமேகலை மெயில் செய்திருக்கிறார்கள் – இது மிகவும் சென்சிடிவான மேட்டர் என்பதால் இதில் எதுவும் திருத்தங்கள் இருந்தால் அவரிடம் ஒப்புதல் பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டிருக்கிறார். அதை அப்படியே தங்களுக்கு ஃபார்வேர்டு செய்திருக்கிறேன்.
கவிஞர் தாமரை இன்று மதியம் சந்திக்க வரச் சொல்லி இருக்கிறார். மாலைக்குள் அவரது கருத்தையும் அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன்
கல்யாண்
From Maalan maalan@gmail.com to kalyan kumar <kalyangii@gmail.com> </kalyangii@gmail.com> cc leenamanimekalai@gmail.com date 24 March 2012 12:05 subject Re: Notes – Puthiya Thalaimurai mailed-by gmail.com Signed by gmail.com Important mainly because of your interaction with messages in the conversation. |
hide details 24 Mar (2 days ago) |
கல்யாண்,
இந்தக் கருத்துக்களை எழுத்து மாறாமல் வெளியிடுவதில் எனக்கு ஆட்சேபணைகள் இல்லை. ஆனால் அது குறித்து நிபந்தனைகள் விதிப்பதை ஏற்க முடியாது.
கருத்துரிமையை மதிக்கிறேன். ஆனால் பத்திரிகைக்கு எழுதுபவர்கள் ஆசிரியரின் உரிமையையும் மதிக்கக் கற்க வேண்டும். கருத்துச் சொல்கிறவர்களைப் போல ஆசிரியரும் பொறுப்பானவர்தான்
ஒரு இதழைப் பொறுத்தவரை ஆசிரியரின் முடிவே இறுதியானது. அதை ஏற்காதவரை நாம் ஏற்க வேண்டியதில்லை
எனவே இந்தக் கருத்து வெளியாகாது
லீனாவிற்கும் நகல் அனுப்பியுள்ளேன். நீங்களும் தெரிவித்து விடுங்கள்
அன்புடன்
மாலன்
———- Forwarded message ———-
From: leena manimekalai <leenamanimekalai@gmail.com></leenamanimekalai@gmail.com>
Date: 2012/3/24
Subject: Re: Notes – Puthiya Thalaimurai
To: Maalan <maalan@gmail.com>
வணக்கம் மாலன்,கல்யாண்,
என் கருத்துகள் வெளியிடுவது, அல்லது வெளி யிடாமல் இருப்பது என்பது உங்கள் முடிவு. ஆனால் நான் ஒன்றை சொல்லும்போது, அதைக் கருத்து மாறாமல் வெளியிடுங்கள் என்று கேட்பது என் உரிமை என்றே கருதுகிறேன். எழுதிக் கேட்கும் பத்திரிகையாளர்கள், பல சமயங்களில் அதை மாற்றி வெளியிடும்போது, பல கசப்பான அனுபவங்களை காலம் எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.
இதை நிபந்தனை என்று கருதுவதை விட , ஒரு படைப்பாளியும் கவனம் என்றே கருத வேண்டும் என்பது எனது நம்பிக்கை.
ஆனால் நீங்கள் கேட்ட விடயத்தில், நேற்று academic term break இருந்தும் நான்கு நீண்ட லெக்சருக்கு மத்தியில், நேரத்தை வளைத்து தான் மெயில் அனுப்பினேன். நேரமும் எல்லோருக்கும் எளிதாக கிடைப்பதில்லை தானே.
நன்றி
மணிமேகலை