ஆகஸ்ட் தடம் இதழில் எனது புதிய கவிதைகள்

துருக்கி ராஜா🧞‍♀️
ஒரே ஒரு கவிதையை அவற்றில் இருந்து இங்கே பிரசுரிக்கிறேன். மற்றதை, தடம் இதழ் வாங்கி வாசிக்கவும்👩🏻‍💻
“ஓரு இலை விடாமல் பூத்து
என்னை சரக்கொன்றையாய் ஆக்கியவன்
நாளங்கள் எங்கும்
மஞ்சள் நதியெனப்
பெய்துக் கொண்டிருக்கிறான்
அதன் நுரைத்தக் கரைகளில்
பதுமைகளென சமைந்திருந்த
ஏக்கங்களின் ஊற்றுக் கண்கள்
ஒவ்வொன்றாய் திறக்க
வாசலற்ற கோயிலென உடலின்
மணிகள் விடாமல் அடிக்கத் தொடங்கின”