Parathaiyarul Raani, பரத்தையருள் ராணி

parathaiyarul-raani

லீனா மணிமேகலையின் கவிதைகளில் பலவாறாக விளிக்கப்படும் பாலியல் உறுப்புகள் ஆண்மையப் புனைவு நீக்கம் செய்யப்பட்டவையே. அவைகள் எந்திரமயமாகிவிட்ட ஒரு நிலையில், அவற்றை அவர் உயிர்நலனாக பாவித்து மறு உற்பத்தி மீதான மயக்கப் புனைவுகளை நீக்கி தனவயப் புனைவுகளில் தன்பால் ஒருமையாக்குகிறார்.. ஆணை உள்ளடக்கியோ, வெளியேற்றியோ, மீண்டும் மீண்டும் தனிமை கொள்ளும் பெண்ணுடல் தன் ஒருமையில் சுய பால்மை கொள்கிறது. இதற்கு ஆண் தேவைப் படலாம், தேவைப் படாமலும் போகலாம், சமூக நாடக நிகழ்வில பெண் கதா பாத்திரங்கள் இடப்படுத்தப்டும் போது பிரதி – பிரதியாளர் என்ற இடைவெளிக்குள் பிரதியை விட்டுவிட்டு பிரதியாளர் பற்றிய பிரதிகளை பெருக்கிக் கொண்டே போவது வாசக எதிர்வினை அல்ல. லீனா மணிமேகலையின் கவிதை, லீனா மணிமேகலை இரண்டையும் பிரதிகளாக்கி வாசிக்கும்போது படைப்பாளி படைப்பில் தன்னை மறைத்துக் கொள்ளாத அப்பட்டமான ஃபூக்கோவியத் தன்மையுடன் இருப்பதால், கவிஞர் விமர்சனத்துக்குள்ளாகிறார். அது நீண்டகால ஆண் மன அமைப்பின் வெளிப்பாடு. அவருடைய பரத்தையருள் ராணி இதுவரை எழுதி வரும் நவீனப் பெண் கவிஞர்களின் உறுதிக்கும் இனிமேல் எழுதப்போகும் இளம் பெண் கவிஞர்களின் துணிவுக்கும் உள்ளடக்கம் – வடிவம் இரண்டிலும் மீறிய கவிதையாகவே வாய்ப்புக் கொண்டிருக்கிறது.

– கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
(ஜூன் 2012)

கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 200

பிரதிகளுக்கு, karuvachyfilms@gmail.com என்ற மின்முகவரிக்கு அஞ்சல் செய்யவும்