பொன்பரப்பி வன்முறைக்கான படைப்பாளர்களின் கண்டனக் கூட்டம்

No photo description available.பொன்பரப்பி வன்முறைக்கான படைப்பாளர்களின் கண்டனக் கூட்டத்தில் நான் பேசியதின் சுருக்கம். சந்ரு அப்பாவோடும், ஐயாசோ தர்மனோடும்,நண்பர்கள் மணிவண்ணன், கோணங்கி, கண்டர், அசதா, வெளி ரங்கராஜன், ராமானுஜம், தமிழச்சியோடும் கைப்பற்றி பேசிக்கலந்த தருணங்களும், எப்போதும் என் காலஞ்சென்ற தந்தை பேராசிரியர் ரகுபதியின் நினைவுகளோடு என்னை அணைத்துக் கொள்ளும் கலை இலக்கியப் பெருமன்ற தோழர்களை சந்தித்த வாய்ப்பும் கூடுதல் மகிழ்ச்சி.
“ பொன்பரப்பி தாக்குதல் என்பது பா.ம.க-வின் சாதிவெறி அரசியலும், பா.ஜ.க-வின் இந்து மதவெறி அரசியலும் கூட்டுச் சேர்ந்து தலித் மக்களுக்கு எதிராக நடத்தியிருக்கும் வன்முறை. இதை உரத்து சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் எழுபதாண்டுகளாய் சுதந்திர இந்தியாவில் சாதிவெறிக்கு முன்னும், மதவாதத்திற்கு முன்னும் ஜனநாயகம் மண்டியிடும் ஒவ்வொரு தடவையும் நாம் தோற்று கொண்டே இருக்கிறோம். சாதியை எதிர்த்து சனநாயகத்தை தக்கவைத்துக் கொள்ளும் நம்பிக்கையாக நம்மிடம் இருப்பது நமதந்த உரத்த குரல் மட்டுமே. தீண்டாமை என்பது தலித் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினை அல்ல, சாதி இந்து சமூகம் இழைக்கின்ற குற்றச்செயல். அந்தக் குற்றங்களுக்கு துணை போகும் மௌனங்களை உடைக்க வேண்டியிருக்கிறது. உடைப்போம்”