செங்கடல்

செங்கடல் ஒரு மக்கள் பங்கேற்பு சினிமா. எப்போதும் வாழ்வும் மரணமும் கண்கட்டி விளையாடும் இந்திய இலங்கை எல்லைக்கிராமமான தனுஷ்கோடியின் மீனவர்களையும் ராமேஸ்வரத்தின் மண்டபம் அகதிகளையும் நடிகர்களாக கொண்டே படமாக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியை, இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போரால் சிதறடிக்கப்படட அதன் எளிய மக்களில் வாழ்வுக் கூறுகளை, மிக நுணுக்கமாக கையாளுகிறது இத்திரைப்படம். முப்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று இலங்கைத் தமிழர் மற்றும் இந்தியத் தமிழ் மீனவர் பிரச்சினையைப் பற்றிய பரந்துப்படட விவாதத்தையும் கவனத்தையும் உருவாக்கியது.

மத்திய தணிக்கைக் குழு, செங்கடலை அதன் அரசியல் விமர்சனங்களுக்காக பொது இடங்களில் திரையிட தடை விதித்திருந்தது. பல மாதகால சட்டப் போராடடத்திற்குப் பின் எந்த வெட்டும் இல்லாமல் மேல்முறையீட்டு ஆணையத்தின் தலையீட்டால் “A” சான்றிதழை ஜூலை 2011-ல் பெற்றது. சென்சார் தடையிலிருந்து மீண்ட செங்கடலின் வெற்றி, கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ளவர்கள் பெற்ற வெற்றி.லீனா மணிமேகலை, ஷோபா சக்தி, சி.ஜெரால்டு கூட்டுழைப்பில் உருவான திரைக்கதையின் பிரதி.

கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 300 (DVD இணைப்புடன்)