
Queer கவிதை- “அந்தரக் கன்னி”
என்னுடைய Queer கவிதை தொகுதியாக வந்த “அந்தரக் கன்னி”யும் பெரும்பாலும் தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டு மெளனமாக்கப்பட்டது. நிறைய Queer வாசகர்கள் கிடைத்தார்கள் என்பது ஒருபுறமிருக்க, பிரதிக்கு கிடைத்திருக்கவேண்டிய இலக்கிய விமர்சனங்களும், விவாதங்களும் கிடைக்காததை சூழலின் போதாமையாகத் தான் கருதுகிறேன்.
“ஒரு பின்னிரவில் பிறந்த பறவை” சிறுகதை குறித்த பேச்சுக்களும் பெரிதாக இல்லை என்பதால் சிறுகதைகள் எழுதுவதற்கான தன்னூக்கம் குறைவாகவே இருந்தது. வாசகசாலை கதையைப் பொருட்படுத்தி கவனப்படுத்தியதற்கு நன்றி. கவிஞர் அகரமுதல்வனின் கருத்துக்களையும், வாசக சாலை நண்பர்களின் விமர்சனங்களையும் அவதானிக்கிறேன். எழுதுவதற்கான குறிப்புகளையெல்லாம் கதைகளாக்கி விட வேண்டும் என்ற உத்வேகத்திற்கு நிகராக எதற்கு எழுதனும் என்ற சோர்வும் இருக்கிறது. கேல்வினோவை மீண்டும் வாசிக்க வேண்டும் என முடிவெடுக்கிறேன். ஏதாவது உற்சாகம் வருதாவென பார்க்கலாம்.



